திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 833 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 82 | எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே | பதவுரை Show / Hideஎத்திறத்தும் ஒத்து நின்று, Eththiraththum Othu Nindru - எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும் உயர்ந்து உயர்ந்த பெற்றியோய், Uyarnthu Uyarntha Pettriyoy - (குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே! மூத்திறத்து மூரி நீர், Mooththiraththu Moori Neer - திருப்பாற்கடலிலே அரா அணை துயின்ற, Ara Anai Thuyinra - சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற நின், Nin - தேவரீர் விஷயத்திலே பத்து உறுத்த சிந்தையோடு நின்று, Paththu Uruththa Sindhaiyodu Nindru - பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம், Paasam Vittavarkku Eththiraththum Inbam - விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும் இங்கும், Ingum - இவ்வுலகத்திலும் அங்கம், Angam - அவ்வுலகத்திலும் ஆகும், Aagum - எளிதாம். பாட்டு, Paatu - பின்பிறக்கவைத்தனன் கொல். |