திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 834 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 83 | மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே | பதவுரை Show / Hideமட்டு உணவு, Mattu Unavu - தேன் நித்யாயிருக்கபெற்ற தண், Than - குளிர்ந்த துழாய், Thuzhai - திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட அலங்கலாய், Alankalai - திருமாலையை அணிந்துள்ளவனே! புலன் கழல் விட்டு, Pulan Kazhal Vittu - (உன்னுடைய) விலக்ஷணமான திருவடிகளை (இந்நிலத்திலேயே அநுபவிப்பதை) விட்டு விண்ணில் ஏறி, Vinnil Eri - பரமபதத்திற் சென்று வீழ்வு இலாத போகம் கண்ணிலும், Veelvul Ilaadha Pogam Kannilum - அழிவில்லாதொரு போகத்தை அடையப்பெற்றாலும். (அது கிடக்கட்டும்) எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால், Ettinodu Irandu Enum Kayittrinai - பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே மனம் தனை, Manam Thanai - மநஸ்ஸை கட்டி, Katti - கட்டுப்படுத்தி வீடு இலாது, Veedu Iladhu - விச்சேதமில்லாபடி வைத்த, Vaitha - அமைக்கப்பட்ட காதல், Kaadhal - ப்ரேமத்தினாலுண்டாகக் கூடிய இன்பம் ஆகுமே, Inbam Aagume - ஆநந்தத்தை ஒக்குமோ அப்பரமபதாநுபவம்! |