திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 835 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
835ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 84
பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான் தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன் என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே
பதவுரை Show / Hide
ஆழியான், Azhiyan - சக்ரஹஸ்தனான எம்பெருமான்
பின் பிறந்த வைத்தனன் கொல், Pin Pirandha Vaiththanankol - நான் இன்னும் சில பிறவிகள் பிறக்கும்படியாகத் திருவுளம் பற்றி யிருக்கிறானோ!
அன்றி, Andri - அல்லது
தன் கழற்கு, Than Kazharku - தன் திருவடிகளிலே
நின்று, Ninru - நிலைத்துநின்று
அன்பு உறைக்க வைத்து, Anbu Uraikka Vaiththu - (எனக்கு) அன்பு ஊர்ஜிதமாம்படியாக ஸங்கல்பித்து
அந்நாள் அறிந்தனன் சொல், Annai Arindhanan Sol - பரமபதத்திலே சென்று அநுபவிக்குமொரு நாளைத்திருவுள்ளம் பற்றியிருக்கிறானோ!
தன் திறந்து, Than Thirandhu - தன் விஷயத்திலே
ஓர் அன்பு இலா, Oru Anbu Ila - சிறிதும் அன்பு இல்லாதவனும்
அறிவு இலாத, Arivu Iladha - விவேகமில்லாதவனும்
நாயினேன், Naayinenn - நீசனுமாகிய
என் திறத்தில், En Thirathil - என் விஷயத்திலே
எம்பிரான், Embiraan - எம்பெருமான்
குறிப்பில் வைத்தது, Kurippil Vaiththathu - திருவுள்ளம்பற்றி விருப்பதானது
என் சொல், En Sol - எதுவோ (அறியேன்)