திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 836 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 85 | நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே | பதவுரை Show / Hideநஞ்சு அரா அணை, Nanju Ara Anai - (ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருள்கிற நாத, Naadha - ஸ்வேச்வரனே! பாத போதினில், Paadha Podhinil - (உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே வைத்த, Vaitha - (இப்போது) வைக்கப்பட்டுள்ள சிந்தை, Sindhai - மகஸ்ஸை வாங்குவித்து, Vaanguviththu - அதில் நின்றும் திருப்பி நீங்குவிக்க, Neenguvikka - வேறு விஷயங்களில் போக்க நீ, Ni - ஸ்வதந்த்ரனான நீ இனம், Inam - இன்னமும் மெய்த்தன், Meiththan - மெய்யாகவே வல்லை ஆதல், Vallai Aathal - ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை அறிந்தனன், Arindhanan - அறிந்திருக்கிறேன் மாயனே!, Mayane - ஆச்சரியசக்தியுக்தனே! என்னை, Ennai - அடியேனை நின் மாயமே உய்ந்து, Nin Maayame Uyndhu - உன்னுடைய மாயச்செயலையே கடத்தி மயக்கினில், Mayakkinil - ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து) மயக்கல், Mayakkal - மயக்கவேண்டா |