திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 837 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 86 | சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கை வாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே | பதவுரை Show / Hideசாடு நாடு பாதனே, Saadu Naadu Paadhane - சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே! சலம் கலந்த பொய்கை வாய், Salam Kalanda Poigai Vaai - (விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே ஆடு அரவின், Aadu Aravin - (செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய வன்பிடர், Vanpidar - வலியதான பிடரியிலே நடம் பயின்ற, Nadam Payindra - நர்த்தனம் செய்த நாதனே!, Nadhane - ஸ்வாமியே கோடு நீடு கைய, Koodu Needu Kaiya - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால் நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே! கண்ணனே, Kannane - கண்ணபிரானே! செய்ய பாதம், Seyya Paatham - (உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை நாளும், Naalum - நாள்தோறும் உன்னினால், Unninhaal - அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது மெய், Mei - மெய்யாகவே வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல், Veedan Aaga Seyadha Vannam En Kol - (அடியேனை) முத்தனாக்காதது ஏனோ! |