திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 838 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
838ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 87
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின் பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே
பதவுரை Show / Hide
நெற்றிபெற்ற கண்ணன், Netripetra Kannan - நெற்றியிலே கண்ணைப் பெற்றவனான சிவனும்:
விண்ணின் நாதன், Vinnin Nadhan - தேவேந்திரனும்
போதின் மேல் நல் தவத்து நாதன், Pothin Mel Nal Thavathu Nadhan - தாமரைப்பூவிலே பிறந்த நல்ல தபாஸனான நான்முகக் கடவுளும்
மற்றும் உள்ள வானவர், Mattrum Ulla Vaanavar - மற்றுமுண்டான பல தேவதைகளும்
கற்ற வெற்றியால், Katra Vetriyal - தாங்கள் தாங்கள் அப்பயணித்துள்ள முறைமைக் கிணங்க
வணங்குபாத!, Vanangupadha - வந்து வணங்கப்பெற்ற திருவடிகளை யுடையவனே!
நாத!, Nadha - நாயகனே!
வேத!, Veda - வேதப்ரதிபாத்யனே!
உரைக்கில், Uraikkil - (என் அத்யவஸாயத்தைச்) சொல்லப்புக்கால் (சொல்லுகிறேன் கேளாய்.)
நின் பற்று அலால், Nin Patru Alal - உன்னையே ஆச்ரயமாகக் கொண்டிருப்பது தவிர
மற்றது ஓர் பற்று, Mattrathu Oru Patru - வேறொர் ஆச்ரயத்தை
உற்றிலேன், Utrilein - நான் நெஞ்சாலும் ஸ்பர்சிக்கவில்லை.