திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 839 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 88 | வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அரவு அளாய்
அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே | பதவுரை Show / Hideவெள்ளை வேலை, Vellai Velai - வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே வெற்பு, Verpu - மந்தரமலையை நாட்டி, Naatti - நட்டு வேள் எயிறு அரர், Vel Eiyiru Arar - வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை அளாய், Alai - (கடைகயிறாகச்) சுற்றி அள்ளல் ஆ, Allal Aa - அலைகள் செறியும்படி கடைந்தஅன்று, Kadaindhanru - (கடலைக்) கடைந்தருளின காலத்தில் அருவரைக்கு, Aruvarikku - தாங்க முடியாததான அம்மலைக்கு ஓர் ஆமை நெய், Oru Amai Ney - (தாரகமான) ஒரு ஆமையாகி வானவர்களுக்கு, Vaanavargalukkum - தேவதைகளுக்கு உள்ள நோய்கள் தீர் மருந்து, Ulla Noykal Theer Marundhu - ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை அளித்த, Alitha - (கடலிற் கடைந்தெடுத்து) அருளின எம் வள்ளலாரை, Em Vallaralarai - உதாரனான எம்பெருமானை அன்றி, Andri - யன்றி மற்று ஓர் தெய்வம், Mattru Or Deivam - வேறொரு தேவதையை நான் மதிப்பவனே, Naan Mathippavane - நான் (ஒருபொருளாக) மதிப்பனோ! |