திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 841 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 90 | குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே | பதவுரை Show / Hideபுனித, Punitha - பரிசுத்தமான எம் ஈசனே, Em Eesane - எம்பெருமானே! குலங்கள் ஆய ஈர் இரண்டில், Kulangal Aaya Eer Irandil - (ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள் பிறந்திலேன், Pirandhileen - நான் பிறக்கவில்லை கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும், Kalangal Aaya Nalkalaigal Kaalilum - (சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும் நவின்றிலேன், Navinrilen - பயிற்சி செய்யவில்லை; புலன்கள் ஐந்தும், Pulangkal Aindhum - பஞ்சேந்திரியங்களையும் வென்றிலேன், Vendrilen - ஜயிக்கவில்லை. பொறியிலேன், Poriyilen - பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு) நின், Nin - உன்னுடைய இலங்கு பாதம் அன்றி, Ilangu Paatham Andri - ஒளிமிக்க திருவடிகளைத் தவிர மற்று ஓர் பற்று இலேன், Mattru Oru Patru Ilen - வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன் |