திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 842 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 91 | பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே | பதவுரை Show / Hideபண் உலாவும் மென்மொழி, Pan Ulaavum Menmozhi - (குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும் படை தடம்கணாள் பொருட்டு, Padai Thadamkanal Poruttu - வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக எண் இலா அரக்கரை, En Ilaa Arakkarai - கணக்கிலாத ராக்ஷஸரை நெருப்பினால், Neruppinal - அம்புகளின் தீயினால் நெருக்கினாய், Nerukkinaai - தொலைத்தருளினவனே! கண் அலால், Kan Alaal - (எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய ஓர் கண் இலேன், Oru Kan Ilen - வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்; கலந்த சுற்றும்மற்று இலேன், Kalanda Suttum Mattru Ilen - நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை; எண் இலாத மாய!, En Ilaadha Maaya - அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே! நின்னை, Ninnai - உன்னை என்றும், Endrum - எக்காலத்திலும் என்னுள் நீக்கல், Ennul Neekkal - என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது. |