திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 846 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 95 | அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே | பதவுரை Show / Hideஎம் அண்ணலே!, Em Annale - எம்பெருமானே! அடக்க அரு, Adakka Aru - அடக்க முடியாத ஐந்து புலன்கள், Aindhu Pulankal - பஞ்சேந்திரியங்களை அடக்கி, Adakki - பட்டிமேயாதபடி நியமித்து ஆசை அரும் அவை, Aasai Arum Avai - விஷயந்தரப் பற்றுக்களை துடக்கு அறுத்து வந்து, Thudakku Aruththu Vandu - ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து நின் தொழில் கண், Nin Thozhil Kan - உன் கைங்கரியத்திலே நின்ற, Nindra - நிஷ்டனாயிருக்கிற என்னை, Ennai - அடையேனே விட கருதி, Vida Karuthi - உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி மெய் செயாது, Mei Seyadhu - என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல் மிக்க ஓர் ஆசை ஆக்கிலும், Mikka Oru Aasai Aakilum - விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும் கடல் கிடந்த நின் அலால், Kadal Kidandha Nin Alal - க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது ஓர் கண் இலேன், Oru Kan Ilen - வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன். |