திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 847 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 96 | வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே | பதவுரை Show / Hideவரம்பு இலாத மாய, Varambu Iladha Maaya - அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே மாய!, Maaya - ஆச்சரியசக்தியுக்தனே! வையம் எழும், Vaiyam Ezhum - ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி) மெய்ம்மையே, Meimmaiye - மெய்யாகவே வரம்பு இல் ஊழி, Varambu Il Oozhi - பலபல கற்பகங்கள் வரையிலும் ஏத்திலும், Aeththilum - தோத்திரம் பண்ணினாலும் வரம்பு இலாத கீர்த்தியாய், Varambu Ilaadha Keerthiyaai - எல்லைகாண முடியாத புகழையுடையோனே! புண்டரீகனே, Pundareekane - புண்டரீகாக்ஷனே! (அடியேன்) வரம்பு இலாயா, Varambu Ilaayaa - முடிவில்லாமல் நேரக்கூடியவனான பல் பிறப்பு, Pal Pirappu - பற்பல ஜன்மங்களை அறுத்து, Aruththu - இன்றோடு முடித்துவிட்டு நின் கழல் வந்து, Nin Kazhal Vandu - உனது திருவடிகளைக் கிட்டி பொருந்தும் ஆ, Porundum Aa - அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி திருந்த, Thirundha - நன்றாக நீ வரம் செய், Nee Varam Sei - அநுக்ரஹித்தருள வேணும் |