திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 849 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 98 | மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே | பதவுரை Show / Hideமாய!, Maaya - ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே! மறம் துறந்து, Maram Thurandhu - கோபத்தை ஒழித்து வஞ்சம் மாற்றி, Vanjam Maatri - கன்னங்சுவடுகளைத் தவிர்த்து ஐம்புலன்கள் ஆசையும் துறந்து, Aimpulankal Aasaiyum Thurandhu - பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து நின் கண், Nin Kan - உன் பக்கலில் ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன், Aasaiye Thodarnthu Nindra Kaayinen - பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன் பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு பேர் இடர் கழிக்கண் நின்றும், Per Idar Kazhikkal Nindrum - மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும் நீக்கும் ஆ, Neekum Aa - நீங்கும் பிரகாரத்தையும் மற்று, Mattru - அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும் எனக்கு, Enakku - அடியேனுக்கு மறந்திடாது, Marandhidaadhu - மறவாமல் கல்க வேண்டும், Kalka Vendum - அருளவேணும் |