திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 851 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
851ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 100
பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம் பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே
பதவுரை Show / Hide
பெறற்கு அரிய மாயனே, Perarku Ariya Mayane - (ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே!
பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும், Pirappinodu Per Idar Kazhikan Nindrum - பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கும் அஃது, Neengum Ahthu - நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள்
இறப்ப வைத்த, Irappa Vaitha - மறந்தொழிந்த
ஞான நீசரை, Gnaana Neesarai - ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை
கரை கொடு, Karai Kodu - ஏற்றம் ஆ
பெறற்கு அரிய, Perarku Ariya - துர்லபமான
சின்ன பாதம் பத்தி ஆன, Chinna Paatham Pathi Aana - உன் திருவடிகளில் பக்தியாகிற
பாசனம், Paasanam - மரக்கல (ஓட) த்தை
எனக்கு நல்க வேண்டும், Enakku Nalka Vendum - அடியேனுக்கு அருளவேணும்.