திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 852 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 101 | இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே | பதவுரை Show / Hideஏமம் நீர் நிறத்து, Aemam Neer Nirathu - மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய அம்மா !, Amma - ஸ்வாமி! இரந்து உரைப்பது உண்டு, Irandu Uraippathu Undu - (தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு வாழி, Vaazhi - பல்லாண்டு பல்லாண்டு; மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில், Mannu Seervaram Tharum Thirukkurippil - (சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில் வைத்தது ஆகில், Vaithathu Aagil - அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.) பரந்த, Paranda - கண்ட விடங்களில் அலைந்து திரிகிற சிந்தை, Sindhai - எனது நெஞ்சானது ஒன்றி நின்று, Onri Ninru - (தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு நின்ன, Ninna - தேவரீருடைய பாதபங்கயம், Paadapangayam - திருவடித்தாமரைகளை நிரந்தரம், Nirantharam - இடைவிடாமல் நினைப்பது ஆக, Ninaippathu Aaga - தியானித்திருக்கும்படியாக நீ நினைக்க வேண்டும், Nee Ninaikka Vendum - தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும். |