திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 853 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
853ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 102
விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர் பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே
பதவுரை Show / Hide
தெழிக்கும் நீர், Thezhikkum Neer - கொந்தளிக்கின்ற கடலிலே
பள்ளி, Palli - சயனங்கொண்டிருக்கிற
மாய, Maaya - ஸர்வேச்வரனே!
பன்றி ஆய, Pandri Aaya - மஹாவராஹமாகக் திருவவதரித்த
வென்றி வீர, Ventrivira - ஜயசீலனான வீரனே!
துள்ளும் நீர், Thullum Neer - துள்ளின கடலிலே
குன்றினால், Kundrinaal - மலைகளைக் கொண்டு
உள்ளு வேனது, Ulluvendathu - (அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய
ஊனம் நோய், Oonam Noi - சரீர சம்பந்தமான நோய்களை
வரம்பு செய்த, Varambu Seitha - அணைகட்டின
தோன்றல், Thonral - ஸ்வாமியே!
யிலவு இலாத காதலால், Yilavu Iladha Kaadhalal - நீக்கமில்லாத அன்பினால்
விளங்கு பாத போதில் வைத்து, Vilangu Paath Podhil Vaiththu - (உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து
ஒழிக்கும் ஆ, Ozhikkum Aa - ஒழிக்கும் வழிகளில்
ஒன்று, Ondru - ஒருவழியை
சொல்லிவிடு, Sollividu - அருளிச் செய்க