திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 854 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 103 | திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே | பதவுரை Show / Hideதிரு கலந்து சேரும், Thiru Kalandu Serum - பெரிய பிராட்டியார் நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற மார்பு, Marbu - திருமார்பையுடையனே! தேவர் தேவர் தேவனே, Thevar Thevar Devane - ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே! இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற, Irukku Kalandha Vedham Neethi Aagi Nindra - (பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான நின் மலா, Nin Mala - பரிசுத்தனே கரு கலந்த, Karhu Kalandha - பொன்னோடு சேர்ந்த காளமேகம் மேனி, Kaalamegam Menni - காளமேகம்போன்ற திருமேனியையுடைய ஆய, Aaya - கண்ணபிரானே! நின் பெயர், Nin Peyar - உன் திருநாமஙக்ளை ஒழிவு இலாது, Ozhivu Iladhu - நிரந்தரமாக உரு கலந்து உரைக்கும் ஆறு, Uru Kalandha Uraikkum Aaru - திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை உரைசெய், Uraichai - அருளிச் செய்யவேணும். |