திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 856 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
856ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 105
மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண் கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய் பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே
பதவுரை Show / Hide
மண்ணை உண்டு, Mannai Undu - பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும்
பின் உமிழ்ந்து, Pin Umizhndhu - பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும்
இரந்துகொண்டு, Irandhukondu - (மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று
அளந்து, Alandhu - அளந்துகொண்டும்.
மண் கண்ணுள் அல்லது இல்லை என்று, Mann Kannul Allathu Illai Endru - ‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி
வென்று, Vendru - (அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த
காலம் ஆயினும், Kaalam Aayinum - ஸர்வகால நிர்வாஹகனே!
பண்ணை வென்ற இன்சொல் மங்கை, Pannai Vendra Insoll Mangai - பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய
கொங்கை, Kongai - திருமுலைத்தடத்திலே
தங்கு, Thangu - பிரியாது வாழ்கிற
பங்கயக்கண்ண, Pangayakkann - புண்டரீகாக்ஷனே!
நின்ன வண்ணம் அல்லது, Ninna Vannam Allathu - உன் வடிவழகுதவிர
எண்ணும் வண்ணம் இல்லை, Ennum Vannam Illai - தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை.