திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 857 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 106 | கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்னொரு காலத்து கறுத்து எதிர்ந்த காலநேமி, Karuthu Edhirntha Kaalanemi - கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன் காலனோடு கூட, Kalanodu Kooda - யமலோகம் போய்ச்சேரும்படியாக அறுந்த, Arundhu - அவன் தலையை அறுத்த ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய், Aazhisangu Thandu Villum Vaalum Aendhinai - பஞ்சாயுதாழ்வார்களை ஏந்தினாய், Aendhinai - திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே! தொறு கலந்த ஊனம் அஃது, Thoru Kalandha Oonam Ahthu - பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை அன்று ஒழிக்க, Andru Ozhikka - அப்போதே போக்குவதற்காக முன், Mun - எல்லாருடையவும் கண்முன்னே குன்றம் பொருத்த நீ, Kundram Poruththa Nee - கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய புகழ்க்கு அலால், Pugazhkkal Ahaal - திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்) நெஞ்சம், Nenjam - எனது நெஞ்சுக்கு ஓர் கேசம் இல்லை, Oru Kesam Illai - சிறிதும் ப்ரதியில்லை. |