திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 858 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 107 | காய் சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே | பதவுரை Show / Hideஎம் ஈசனே, Em Eesane - எம்பெருமானே! காய் சினந்த காசிமன்னன், Kaai Sinantha Kaasimanthan - மஹா கோபியான காசிராஜாவும் வக்கரன், Vakkaran - (ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும் பவுண்டிரன், Pavundiran - பௌண்ட்ரக வாஸுதேவனும் மா சினந்த மாலி, Maa Sinantha Maali - அதிகோபிஷ்டனான மாலியும் மா கமாலி, Maa Kamali - மஹானான ஸுலிமாலியும் கேசி, Kesi - (குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும் தேனுகன், Thenughan - தேநுகாஸுரனும் நாசம் உற்று வீழ, Naasam Utru Veezh - துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக நாள் கவர்ந்த, Naal Kavarndha - (அவர்களுடைய) வாழ்நாளை முடித்த நின், Nin - தேவரீருடைய கழற்கு அலால், Kazharppu Ahaal - திருவடிகளுக்குத் தவிர எத்திறந்தும், Eththirandhum - வேறு எவ்விஷயத்திலும் நேச பாசம், Nesa Paasam - ஆசாபாசத்தை வைத்திடேன், Vaiththidein - வைக்கமாட்டேன் |