திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 859 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
859ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 108
கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன் நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும் வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும் கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே
பதவுரை Show / Hide
கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன், Kaedu Il Seer Varaththan Aam Ayan - அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
கெடும் வரத்து அரன், Kedum Varathu Aran - எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு     பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய)
நாடினோடு கூட, Naadinoodu Kooda - நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது, Koodum Aasai Alladhu - எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு, Naattaam Aayiraththan Naadu - ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும், Kannirum - அடையப்பெறுவதாயிருந்தாலும்
வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும், Veedu Aanadhu Pogam Eydhi Veetirundha Podhiyilum - மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும்
ஒன்று குறிப்பில் கொள்வனோ, Onru Kurippil Kolvanon - மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ.