திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 86 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
86பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 1
தொடர் சங்கிலி கை சலார் பிலாரென்னத் தூங்கு பொன் மணி யொலிப்ப படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் உடங்கூடிக் கிண் கிணி யாரவாரிப்ப உடை மணி பறை கறங்க தடந்தா ளிணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-1
பதவுரை Show / Hide
சங்கிலி கை தொடர்,Sangili kai todar - இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன,Salar pilar enna - ’சலார்பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு,Thoongu - தொங்குகின்றனவும்
பொன்,Pon - பொன் கயிற்றிற்கட்டி யிருப்பனவுமான
மணி,Mani - மணிகள்
ஒலிப்ப,Olippa - ஒலிக்கவும்
படு,Padu - உண்டான
மும்மதம் புனல்,Mummadham punal - மூன்று வகையான மதநீர்
சோர,Sora - பெருகவும்
நின்று,Nindru - இருந்து கொண்டு
வாரணம்,Varanam - யானை
பைய,Paiya - மெல்ல
ஊர்வது போல்,Oorvathu pol - நடந்து போவது போல
கிண் கிணி,Kin kini - காற் சதங்கைகள்
உடன் கூடி,Udan koodi - தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப,Aravarippa - சப்திக்கவும்
உடை,Udai - திரு வரையில் கட்டிய
மணி,Mani - சிறு மணிகள்
பறை கறங்க,Parai karanga - பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்,Sarngam - சார்ங்கமென்னும் வில்லை
பாணி,Pani - கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு,Thada thal inai kondu - (தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை,Thalar nadai - இளநடையை
நடவானோ,Nadavano - நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)