திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 860 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
860ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 109
சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய் செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
பதவுரை Show / Hide
சுருங்குவாரை இன்றியே, Surunguvaarai Indriye - சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே
சுருங்கினாய், Surunginaai - (ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே!
சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே, Surungiyum Perukku Vaarai Indriye - அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல்
பெருக்கம் எய்து, Perukkam Eydhu - (த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி
பெற்றியோய், Petriyoiy - பெற்ற பெருமானே
செருக்குவார்கள், Serukkuvargal - அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய
தீ குணங்கள், Thee Gunangal - அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை
தீர்த்த, Theertha - தொலைத்தருளின
என்று, Endru - இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு
இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த, Irukkuvaai Muni Kanangal Aentha - வேதமோதும் வாயையுடையரான  மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு)
யானும் ஏத்தினேன், Yaanum Aeththinaen - அடியேனும் துதித்தனித்தனை.