திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 861 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
861ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 110
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய் மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம் நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே
பதவுரை Show / Hide
கரும்பு உலாவு, Karumbu Ulaavu - வண்டுகள் உலாவப்பெற்ற
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய
மாய!, Maaya - ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே!
நாயினேன், Naayinenn - நீசனான அடியேன்
தூயனாயும், Thuyanaayum - பரிசுத்தனாகவோ
அன்றியும், Anriyum - பரிசுத்தனல்லாதவனாகவோ
நின்னை, Ninnai - தேவரீரை
வணங்கி, Vanangi - ஸேவித்து
வேலை நீர்  பாயலோடு, Velaai Neer Paayalodu - திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட
பக்தர் சித்தர், Bhakthar Sidhthar - பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே
மேய, Meya - குடியிருக்கின்ற
வேலைவண்ணனே!, Velaivannaney - கடல்வண்ணனே!
வாழ்த்தும் இது எலாம், Vaazhthum Idhu Elam - துதிப்பதாகிற இதனையெல்லாம்
நீயும், Neeyum - (ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும்
நின் குறிப்பினில் பொறுத்து, Nin Kurippinil Poruthu - திருவுள்ளத்திலே க்ஷமித்திருள்
நல்கு, Nalku - அநுக்ரஹம் செய்ய வேணும்.