திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 862 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 111 | வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே | பதவுரை Show / Hideநின்னை வைது, Ninnai Vaithu - தேவரீரை நிந்தித்து வல்லஆ பழித்தவர்க்கும், Vallaa Pazhithavarkkum - சக்தியுள்ளவரைக்கும் அபவாதங்களை சொன்ன சிசுபாலாதிகளுக்கும் மாறு இல்போர் செய்து, Maaru Ilpor Seythu - ஒப்பில்லாத யுத்தம்பண்ணி நின்ன செற்றும், Ninna Settrum - தேவரீருடைய தீயில், Theeiyil - கோபாக்நியில் வெந்தவர்க்கும், Venthavarkkum - வெந்துபோன வாலி முதலானோர்க்கும் உனைவந்து எய்தல் ஆகும் என்பர், Unnaivandu Eydhal Aakum Enbar - தேவரீரைக் கிட்ட உஜ்ஜீவிக்கப்பெறலாகுமென்று (மஹரிஷிகள்) சொல்லாநின்றனர்; ஆதலால், Aadhalal - ஆகையாலே எம் மாய!, Em Maaya - எம்பெருமானை! ஞானம் நாதனை, Gnanam Nadhanai - ஸர்வலோக ஸம்ரக்ஷகனே! நாயினேன், Naayinenn - அடியேன் பண்ணின செய்த குற்றம், Seytha Kuttram - குற்றங்களை நற்றம் ஆகவே கொள், Nattram Aagave Kol - குணமாகவே கொள்ளல் வேண்டும். |