திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 863 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 112 | வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே | பதவுரை Show / Hideநாள்கள், Naalgal - தினங்களானவை வாள்கள் ஆகி செல்ல, Vaalgal Aagi Sella - (நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய நோய்மை, Noymai - பலவகை வியாதிகளாலே குன்றி, Kundri - உடல் பலக்குறைபட்டு மூப்பு எய்தி, Mooppu Eydhi - கிழத்தனமும் வந்து சேர்ந்து மாளும் நாள் அது, Maalum Naal Adhu - மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது; ஆதலால், Aadhalal - ம்ருத்யுகாலம் குறுகிவிட்டபடியால் என் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே! ஆனது நன்மை ஆகும் என்று, Aanathu Nanmai Aakum Endru - எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று நன்கு உணர்ந்து, Nanru Unarndhu - த்ருடமான அத்யவஸாயங்கொண்டு வணங்கி வாழ்த்து, Vanangi Vazhthu - (அவ்வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா; அது அன்றியும், Adhu Anriyum - அதற்கு மேலே மால பாதமே, Maala Paathame - அப்பெருமானுடைய திருவடிகளே மீள்வு இலாத போகம், Meelvu Ilaadha Pogam - மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகத்தை நல்க வேண்டும், Nalka Vendum - அளிக்கக்கடவது |