திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 864 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 113 | சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே | பதவுரை Show / Hideநெஞ்சமே!, Nenjame - என்மனமே வாழி, Vaazhi - உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள் சலம் கலந்த செம்சடை, Salam Kalanda Semsadha - கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும் கறுத்த கண்டன், Karutha Kandan - (விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும் புலன் கலங்க, Pulan Kalanga - ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு வெண்தலை, Venthala - வெளுத்துப்போன கபாலத்திலே உண்ட, Unda - பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த பாதகத்தான், Paadhakaththaan - கோரமாதகியுள்ள சிவபிரானுடைய வன்துயர்கெட், Vanthuyarket - வலிதான துக்கம் தீரும்படி அலங்கல், Alangal - திருத்துழாய் மாலையையணிந்த மார்வில், Maarvil - திருமார்பினின்றும் வாசம் நீர், Vaasam Neer - திவ்யபரிமளமான தீர்த்தத்தை கொடுத்தவன், Koduththavan - அவனுக்கு ப்ரஸாதித்தருளி அடுத்த சீர், Adutha Seer - என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய நலம்கொள் மாலை, Nalamkol Maalai - ஆநந்தமயனான எம்பெருமானை கண்ணும் வண்ணம், Kannum Vannam - அணுகும் வழியாகிற அவனது திருவருளையே எண்ணு, Ennu - அநுஸந்தித்து |