திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 865 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
865ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 114
ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய் வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே
பதவுரை Show / Hide
என் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே
ஈனம் ஆய, Eenam Aaya - (அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல
எட்டும், Ettum - அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும்
நீக்கி, Neekki - போக்கி
ஏதம் இன்றி, Edham Inri - ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய்
மீது போய், Meethu Poi - (அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று
வானம், Vaanam - பரமபதத்தை
ஆளவில்லை நூல், Aalavillai Nool - அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில்
ஞானம் ஆகி, Gnanam Aagi - ஆத்மஞானத்தை யளிப்பவனாயும்
ஞாயிறு ஆகி, Gnayiru Aagi - ஸூரியனைப்போலே இந்திய ஞானத்தை அளிப்பவனாயும்
ஏனம் மூர்த்திஆய், Enam Moorthiyaai - மஹா வராஹமூர்த்தியாய்
ஞாலம் முற்றும், Gnaalam Muttum - பூமி முழுவதையும்
ஓர் எயிறு, Oru Eiyiru - ஒரு கோட்டினாலே
இடந்த, Idandha - அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த
எந்தை, Endhai - எம்பெருமானது
பாதம், Paatham - திருவடிகளை
எண்ணி, Enni - சிந்தித்து
வணங்கி, Vanangi - நமஸ்கரித்து
வாழ்த்து, Vazhthu - துதிக்கக்கடவை