திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 866 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 115 | அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே | பதவுரை Show / Hideமுத்தனார், Muththanar - ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும் முகுந்தனார், Mukundanar - மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்; ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து, Othu Ovaadha Pal Pirappu Ozhithu - ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி நம்மை ஆட்கொள்வாள், Nammai Aadkolvai - நம்மை அடிமை கொள்வதற்காக அத்தன் ஆகி, Aththan Aagi - பிதாவாயும் அன்னை ஆகி, Annai Aagi - மாதாவயும் ஆளும் எம்பிரானும் ஆய், Aalum Empranaanum Aayi - அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும் நம்முன், Nammun - நம்மிடத்திலே புகுந்து மேவினார், Pugundhu Mevinar - புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு) ஏழை நெஞ்சமே, Ezha Nenjame - மதிகெட்ட மனமே எத்தினால், Ethinai - எதுக்காக இடர் கடல், Idar Kadal - துக்கஸாகரத்திலே கிடத்தி, Kidathi - அழுந்திக் கிடக்கிறாய். |