திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 867 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 116 | மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே | பதவுரை Show / Hideமாறு செய்த, Maaru Seitha - எதிரிட்ட வாள் அரசர்கள், Vaal Arasarkal - ஆயுதபாணியான இராவணனுடைய நாள் உவப்ப, Naal Uvappa - வாழ்நாள் முடியும்படியாக அன்று, Andru - முற்காலத்து இலங்கை, Ilankai - லங்காபுரியை சென்று, Sendru - அடைந்து நீறு செய்து, Neeru Seidhu - நீறாக்கி கொன்று, Konru - அவனைக் கொன்று வெற்றி கெணண்ட, Vettri Kenanda - ஜயம்பெற்ற வீரனார், Veeranaar - மஹாவீரரான பெருமாள் என்னை, Ennai - அடியேனை தம்முள் வேறு செய்து வைத்திடாமையால், Thammul Veru Seidhu Vaithidamaiyaal - தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி) நமன், Naman - யமனானவன் கூறுசெய்து கொண்டு, Koora Seidhu Kondu - (என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து இறந்த குற்றம், Iranda Kutram - நான் செய்து கழித்த பாவங்களை என்ன வல்லனே, Enna Vallanai - நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ. |