திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 868 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
868ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 117
அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான் அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன் நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே
பதவுரை Show / Hide
அச்சம், Acham - பயமென்ன
நோயோடு அல்லலி, Noyodu Allali - வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன
அவாயம் மூப்பு, Avaayam Moopu - அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன
பல் பிறப்பு, Pal Pirappu - பலவகைப் பிறப்புகளென்ன
இவை, Ivai - ஆகிய இவற்றையும்
வைத்த சிந்தை, Vaitha Sindhai - இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும்
வைத்த ஆக்கை, Vaitha Aakkai - கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும்
மாற்றி, Maatri - போக்கடித்து
வானில், Vaanil - (நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்)
அச்சுதன், Achuthan - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும்
அனந்த கீர்த்தி, Anantha Keerthi - எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும்
ஆதி அந்தம் இல்லவன், Aadhi Andham Illavan - முதலும் முடிவும் மில்லாதவனும்
நஞ்சு நாக அணை கிடந்த நாதனை, Nanju Naaga Anai Kidandha Naadhanaik - (விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும்
வேத கீதம், Veda Geetham - வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம்