திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 87 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
87பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 2
செக்க ரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண் பல் முளையிலக அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன் தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ–1-7-2
பதவுரை Show / Hide
செக்கரிடை,Sekkaridai - செவ் வானத்திலே
நுனி கொம்பில்,Nuni kombil - கொம்பின் நுனியிலே
தோன்றும்,Thondrum - காணப்படுகிற
சிறுபிறை முளை போல,Sirupirai mulai pola - சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல,
நக்க,Nakka - சிரித்த
செம் அவர் வாய்,Sem avar vai - மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது,Thinnai meedhu - மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை,Nalir ven pal mulai - குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக,Ilaka - விளங்க
அஃகுவடம்,Akkuvadam - சங்கு மணி வடத்தை
உடுத்து,Uduthu - (திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி,Amai thali - ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட,Poonda - கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்,Anantha sayanan - திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)