| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 873 | திருமாலை || (திருநாம சங்கீர்த்தநத்தில் உள்ள இனிமையாலே பரமபதமும் வேண்டா என்கிறார் ) 2 | பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே | pachchai maa malai pol meni,பச்சை மா மலை போல் மேனி - பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும் pavalam vai,பவளம் வாய் - பவளம் போன்ற சிவந்த திருவாயையும் sem kamalam kan,செம் கமலம் கண் - செந்தாமரை மலர்போன்ற திருக் கண்களையுமுடைய achutha,அச்சுதா - அச்சுதனே! amarar Yerey,அமரர் ஏறே - நித்ய ஸுரிகளுக்குத் தலைவனே! aiyar tham kolunthe,ஆயர் தம் கொழுந்தே - இடையர் குலத்தில் தோன்றிய இளம் குமாரனே ennum,என்னும் - என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற ichchuvai,இச்சுவை - இந்த அநுபவ ருசியை thavira,தவிர - விட்டுவிடும்படி yaan poi,யான் போய் - யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று indira lokam aalum,இந்திர லோகம் ஆளும் - (அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற achchuvai,அச்சுவை - அந்த அநுபவ ருசியை perinum,பெறினும் - அடைவதாயிருந்தாலும் venden,வேண்டேன் - (அதனை) விரும்பமாட்டேன். |