| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருமாலை- தனியன் || (மற்றொன்றும் வேண்டா மனமே) இதில் மநஸ்ஸைக்குறித்து, பகவத் விஷயத்தில் வாசிகமாக அடிமை செய்த ஆழ்வார் திருநாமத்தை நிரந்தர அநுஸந்தாநம் பண்ணும்படி சொல்லுகிறது. 18 | மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர் கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டரடிப் பொடியெம் பெருமானை யெப்பொழுதும் பேசு | Maname, மனமே - என் நெஞ்சமே! Madhil Arangar, மதிள் அரங்கர் - ஸப்த ப்ராகாரங்களையுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரும் Kanru inam, கன்று இனம் - பசுக்கூட்டங்களை Meitha, மேய்த்த - மேய்த்தவருமான எம்பெருமானுடைய Kazhal inai keezh, கழல் இணை கீழ் - இரு திருவடிகளிலும Utra, உற்ற - ஊன்றிய பக்தியையுடையவரும் Thirumaalai paadum, திருமாலை பாடும் - திருமாலை' என்னும் பிரபந்தத்தைப் பாடுமவரும் Seer, சீர் - கல்யாண குணங்கள் பொருந்தியவரும் Thondar adi podi, தொண்டர் அடி பொடி - தொண்டரடிப்பொடி என அழைக்கப்படுமவருமான Em Perumaanai, எம் பெருமானை - எங்களுடைய ஸ்வாமியை Epozhuthum, எப்பொழுதும் - எல்லாக்காலத்திலும் Pesu, பேசு - அநுஸந்தித்துப்போரு Matru ondrum, மற்று ஒன்றும் - வேறு ஒரு புருஷார்த்தமும் Venda, வேண்டா - வேண்டுவதில்லை |
| 151 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 13 | வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13 | அசோதை,Ashodai - யசேதையானவள் வார்,Vaar - (ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற காது,Kaadhu - காதுகளை தாழ,Thaazha - தொங்கும்படி பெருக்கி,Perukki - வளர்த்து அமைத்து,Amaiththu - ஓரளவிலே நிற்கும்படி செய்து மகரம் குழை இட வேண்டி,Magaram Kuzhai Idu Vendi - மகர குண்டங்களை இடவிரும்பி திருமாலை,Thirumalai - ச்ரிய பதியான கண்ணனை சீரால் சொன்ன,Seeraal Sona - சிறப்புக் குறையாதபடி அழைத்த சொல்,Soll - சொற்கள் சிந்தையுள்,Sindhaiyul - (தம்முடைய) மநஸ்ஸிலே நின்று,Nindru - நிலையாகப் பொருந்தி திகழ,Thigazha - விளங்க, பார் ஆர் தொல் புகழான்,Paar Aar Thol Pugazhaan - பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும் புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மன்னன்,Mannan - நிர்வாஹகருமான’ பெரியாழ்வார் பன்னிரு நாமத்தால் சொன்ன,Panniru Naamaththaal Sona - த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த ஆராத,Aaraadha - (ஓத ஓத) த்ருப்தி பிறவாத அந்தாதி,Andhaadi - அந்தாதித் தொடையினாலாகிய பன்னிரண்டும்,Pannirandum - பன்னிரண்டு பாட்டுக்களையும் வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் அச்சுதனுக்கு,Achuthanukku - எம்பெருமானுக்கு அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவர். |
| 332 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 5 | நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்–4-1-5 | நீர்,Neer - (எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது ஏறு,Eru - ஏறப் பெற்ற செம் சடை,Sem Sadai - சிவந்த ஜடையையுடைய நீல கண்டனும்,Neela Kandhanum - (விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும். நான்முகனும்,Naanmughanum - சதுர் முக ப்ரஹ்மாவும் முறையால்,Muraiyaal - (சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற,Seer Eru Vaasagam Seiyya Nindra - சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற திருமாலை,Thirumaalai - ச்ரிய : பதியாகிய எம்பெருமானை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;) வார் ஏறு,Vaar Eru - கச்சை அணிந்த கொங்கை,Kongai - முலைகளை யுடைய உருப்பிணியை,Urupiniyai - ருக்மிணிப் பிராட்டியை வலிய,Valiya - பலாத்காரமாக பிடித்துக்கொண்டு தேர் ஏற்றி,Ther Eritti - (தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு சேனை நடுவு,Saenai Naduvu - (அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்துவர) அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே போர் செய்ய,Por Seiyya - (அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய சிக்கென கண்டார் உளர்,Sikkena Kandaar Ular - திண்மையான (த்ருடமாக) கண்டார் உளர் |
| 380 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் பத்தரா யிறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர்க் கோன் சித்தம் நன்கொருங்கித் திரு மாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார் சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே–4-5-10 | திருமாலை,Thirumaalai - திருமால் திறத்தில் |
| 552 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 8 | சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன் நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும் தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே | தேம் கனி, Them Kani - இனிமையான பழங்களை யுடைய மாபொழில், Maapozhil - மாந்தோப்பிலே செம் தளிர் கோதும், Sem Thalir Kodhum - சிவந்த துளிர்களை வாயலகால் கொந்துகிற சிறு குயிலே!, Siru Kuyile! - இளங்குயிலே! சார்ங்கம், Saarngam - தனது வில்லை வளைய வலிக்கும், Valaiya Valikkum - வளைத்து வலிக்கும் சக்தியை யுடைய தட கை, Thada Kai - பெரிய திருக் கைகளை யுடையனாய் சதுரன், Sathuran - ஸகலவித ஸாமர்த்தியமுடையனான எம்பெருமான் பொருத்தம் உடையன், Porutham Udaian - ப்ரணயாதியிலும் வல்லமை பெற்றவன் நாங்கள், Naangal - அவனும் நானும் ஆக இருவரும் இருந்து, Irundhu - சேர்ந்திருந்து எம்மில் ஒட்டிய, Emmil Otiya - எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்து கொண்ட கச்சங்கம், Kachangam - ஸங்கேதத்தை நானும் அவனும் அறிதும், Naanum Avanum Aridhum - நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார் ஆங்கு திருமாலை, Aangu Thirumaalai - தூரஸ்தனாயிருக்கிற ஸ்ரீ: பதியை ஒல்லை விரைந்து, Ollai Virainthu - மிகவும் சீக்கிரமாக கூ கிற்றி ஆகில் நீ, Koo Kitri Aagil Nee - கூவ வல்லையே யானால் நீ அவனை, Avanai - (பிறகு அவன் இங்கு வந்த பிற்பாடு) அவன் விஷயத்தில் நான் செய்வன, Naan Seivana - நான் செய்யப் போகிற மிறுக்குக்களை காண், Kaan - காணக் கடவை |
| 644 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 8 | வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | வெளிய சங்கு ஒன்று உடையானை, Veliya Sangu Ondru Udaiyaanai - வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய் பீதகம் ஆடை உடையானை, Peethagam Aadai Udaiyaanai - பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய் நன்கு அளி உடைய, Nangu Ali Udaya - நன்றாகக் கிருபை யுடையவனாய் ஆழியானை, Aazhiyaanai - திருவாழியாழ்வானை யுடையவனாய் திருமாலை, Thirumaalai - ஸ்ரீய: பதியான கண்ணனை கண்டீரே?, kandeere? - கண்டீரே? களி வண்டு, Kali Vandu - (மதுபானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை எங்கும், engum - எப் புறத்திலும் கலந்தால், kalandhal - பரம்பினாற்போலே கமழ் பூங்குழல்கள், Kamazh Poonguzhalkal - பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை தடதோள்மேல், Thada thol mel - பெரிய திருத் தோள்களின் மேலே மிளிர நின்று விளையாட, Milira Nindru Vilaiyaada - (தாழ்ந்து) விளங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |
| 872 | திருமாலை || (திரு நாம சங்கீர்தனத்தாலே யமன் முதலானோர் தலையிலே காலை வைத்துக் கூத்தாடும்படியான பெருமை பெற்றேன்) 1 | காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே | moo ulagu,மூ உலகு - எல்லா உலகங்களையும் undu,உண்டு - (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து umizhndha,உமிழ்ந்த - (பிரளயம் நீங்கின பிறகு ) அவற்றை வெளிப்படுத்திய mudhalva,முதல்வ - ஜகத் காரண பூதனே! arangamaa nagarulane,அரங்கமாநகரளானே! - இங்கு வந்து சாய்ந்து அருளிற்று -திருநாமம் சொல்ல வல்லான் ஒருவனை கிடைக்கவற்றோ என்னும் ஆசையாலே அன்றோ nin naamam katra,நின் நாமம் கற்ற - உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான aavalippudaimai,ஆவலிப்புடைமை - செருக்கினாலே pulanai,புலனை - பஞ்சேந்திரியங்களையும் kaavalil vaithu,காவலில் வைத்து - (வெளியில் ஓடாதபடி) சிறையில் அடைத்து kali thannai,கலி தன்னை - பாப ராசியை kadakka payndhu,கடக்க பாய்ந்து - வெகுதூரம் உதறித் தள்ளி naavalittu,நாவலிட்டு - ஜய கோஷம் செய்து namandhamar thalaigal meedhe,நமன்தமர் தலைகள் மீதே - யம படர்களின் தலை மேல் uzhi tharugindrom,உழி தருகின்றோம் - அடி யிட்டுத் திரிகின்றோம். kandai,கண்டாய் - (முன்னிலை அசைச்சொல்) |
| 873 | திருமாலை || (திருநாம சங்கீர்த்தநத்தில் உள்ள இனிமையாலே பரமபதமும் வேண்டா என்கிறார் ) 2 | பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே | pachchai maa malai pol meni,பச்சை மா மலை போல் மேனி - பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும் pavalam vai,பவளம் வாய் - பவளம் போன்ற சிவந்த திருவாயையும் sem kamalam kan,செம் கமலம் கண் - செந்தாமரை மலர்போன்ற திருக் கண்களையுமுடைய achutha,அச்சுதா - அச்சுதனே! amarar Yerey,அமரர் ஏறே - நித்ய ஸுரிகளுக்குத் தலைவனே! aiyar tham kolunthe,ஆயர் தம் கொழுந்தே - இடையர் குலத்தில் தோன்றிய இளம் குமாரனே ennum,என்னும் - என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற ichchuvai,இச்சுவை - இந்த அநுபவ ருசியை thavira,தவிர - விட்டுவிடும்படி yaan poi,யான் போய் - யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று indira lokam aalum,இந்திர லோகம் ஆளும் - (அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற achchuvai,அச்சுவை - அந்த அநுபவ ருசியை perinum,பெறினும் - அடைவதாயிருந்தாலும் venden,வேண்டேன் - (அதனை) விரும்பமாட்டேன். |
| 874 | திருமாலை || (அத்தோடு விரோதிக்கும் சம்சாரமும் வேண்டாம் என்கிறார்) 3 | வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் ) பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே -3- | manisar thaam,மனிசர் தாம் - மநுஷ்யர்கள் vedham nool,வேதம் நூல் - வேத சாஸ்திரத்திற்படியே nooru pirayam puguvarellum,நூறு பிராயம் புகுவரேலும் - நூறு பிராயம் வாழ்ந்திருப்பர்களே யானாலும் paathiyum,பாதியும் - அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும் urangi pogum,உறங்கி போகும் - உறக்கத்தாலே கழியும்; nindra ippadinaiyaandu,நின்ற இப்பதினையாண்டு - மிகுந்த ஐம்பது வருஷம் paedhai,பேதை - சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும் balagan,பாலகன் - ‘சிறு பயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் adhu aagum,அது ஆகும் - நெஞ்சால் நினைக்கவும் தகாத யௌவநாவஸ்தையாயும் pini,பிணி - வியாதி மயமாயும் pashi,பசி - ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும் mooppu,மூப்பு - கிழத் தனமாயும் thunbam,துன்பம் - மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்; aadhaal,ஆதலால் - இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால் piravi,பிறவி - ஜந்மத்தை venden,வேண்டேன் - விரும்புகிறேனில்லை. |
| 875 | திருமாலை || (கொடிய பாவிகளுக்கும் திரு நாமம் சொல்ல அதிகாரம் உண்டாய் இருக்க இழப்பதே என்று வயிறு எரிகிறார்) 4 | மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே | moitha,மொய்த்த - அடர்ந்து கிடக்கிற val vinaiyul nindru,வல் வினையுள் நின்று - கொடிய பாப ராசியினுள்ளே நின்று moonru ezuthu udaiya peraal,மூன்று எழுத்து உடைய பேரால் - கோவிந்த நாமத்தாலே kathira bandhum andrae,கத்திர பந்தும் அன்றே - க்ஷத்ர பந்துவமன்றோ paraangadhi,பராங்கதி - சிறந்த பதவியை kandu kondaan,கண்டு கொண்டான் - கண்டு அநுபவிக்கப் பெற்றான்; ithanai adiyar aanarkku,இத்தனை அடியர் ஆனார்க்கு - இவ்வளவு ஆநுகூல்யம் உடையவர்கட்கும் irangum,இரங்கும் - அருள் புரிகின்ற nam arangan aaya pitthanai,நம் அரங்கன் ஆய பித்தனை - நம் அழகிய மணவாளனாகிற ஆஸ்ரித வியாமுக்தனை petrum,பெற்றும் - சேஷியாகப் பெற்று வைத்தும் piraviyul,பிறவியுள் - ஸம்ஸாரத்திலகப்பட்டு pinangum aare,பிணங்கும் ஆறே - வருந்துகிற விதம் என்னே! antho,அந்தோ - ஆத்ம வஸ்து இப்படிப் படுவதே என்று வெறுக்கிறார் |
| 876 | திருமாலை || (அல்ப்பமாயும் அநித்யமுமாய் உள்ள ப்ராக்ருத விஷயங்களைப் பற்றுவார் சீலமில்லா சிறியார் என்கிறார்) 5 | பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித் தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே | pendiraal,பெண்டிரால் - மனைவியரால் sugangal,சுகங்கள் - ஸகல ஸூகங்களையும் uyppaan,உய்ப்பான் - அநுபவிப்பதாகக் கருதி periyadhu or idumbai,பெரியது ஓர் இடும்பை - மிகப் பெரிதான துயரங்களை poondu,பூண்டு - மேற் கொண்டு iraa,இரா - இராப் பொழுதிலே undu,உண்டு - புஜித்து kidakkum podhum,கிடக்கும் போதும் - படுக்கையிலே சாயும் போதும் udalukke karaittu,உடலுக்கே கரைத்து - சரீரத்திற்காகவே கவலைப் பட்டு nainthu,நைந்து - நெஞ்சு உளையப் பெற்று, than thuzhaam maalai maarban thamargal aay,தண் துழாம் மாலை மார்பன் தமர்கள் ஆய் - குளிர்ந்த திருத் துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமனது அடியாராய் paadi,பாடி - (அவன் குணங்களை வாயாரப்) பாடி aadi,ஆடி - (பரவசமாய்க்)கூத்தாடி thontu poontu,தொண்டு பூண்டு - (இவ்வகைகளாலே)சேஷ வ்ருத்தியை மேற் கொண்டு amutham unnaa thozhumbar,அமுதம் உண்ணா தொழும்பர் - (பகவத் குணானுபவமாகிற) அமுதத்தை புஜிக்கப் பெற்றாத நீர் soru ukkum aare,சோறு உகக்கும் ஆறே - சோற்றை விரும்பும் வகை என்னோ! |
| 877 | திருமாலை || (போக்தாவின் நிலை இல்லாமையை சொல்கிறார்) 6 | மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர் அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே | maram suvar,மறம் சுவர் - கொடுமையாகிற சுவரை madhil eduthu,மதிள் எடுத்து - மதிளாக எழுப்பியும் marumaikku,மறுமைக்கு - ஆமுஷ்மிக பலத்திற்கு verumai poondu,வெறுமை பூண்டு - ஏழ்மையை மேற் கொண்டும் இருக்கிற நீங்கள் puram suvar,புறம் சுவர் - வெளிச் சுவராய் oattai,ஓட்டை - அநித்யமான maadam,மாடம் - சரீரமானது puralum podhu,புரளும் போது - தரையில் விழும் காலத்தை ariya maatteer,அறிய மாட்டீர் - அறிய மாட்டீர் aram suvar aagi nindra,அறம் சுவர் ஆகி நின்ற - தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற aranganarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளனுக்கு aal seyaadhe,ஆள் செய்யாதே - அடிமை செய்யாமல் puram suvar,புறம் சுவர் - வெளிச் சுவரான உடம்பை kolam seydhu,கோலம் செய்து - அலங்கரித்து pul kavva,புள் கவ்வ - பறவைகள் கவ்விக் கொள்ளும் படி kidakkindreere,கிடக்கின்றீரே - கிடக்கின்றீர்களே. |
| 878 | திருமாலை || (முமுஷுக்களாக ப்ரமித்து இருக்கிற பாஹ்ய மதஸ்தரைக் குறித்து ஆஸ்ரியத் தக்க தைவத்தை உபதேசிக்கிறார்) 7 | புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான் தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் | kalai,கலை - சாஸ்திரங்களை ara katra maandhar,அற கற்ற மாந்தர் - நன்றாக ஓதின மனிதர் pulai aram aagi nindra,புலை அறம் ஆகி நின்ற - நீச தர்மமாயிராநின்ற puthodu samanam,புத்தொடு சமணம் - பௌத்த மதம் க்ஷபண மதம் முதலிய ellaam,எல்லாம் - எல்லா மதங்களையம் kaanparo,காண்பரோ - நெஞ்சாலே தான் ஆராய்வார்களோ? ketparo,கேட்பரோ - காது கொடுத்துத் தான் கேட்பார்களோ? (அது நிற்க) thalai arupundum,தலை அறுப்புண்டும் - என் தலையானது அறுக்கப் பட்டாலும் saageen,சாகேன் - நான் சாக மாட்டேன்; sathiyam,சத்தியம் - இது சத்தியம் ; aiya,ஐயா - ஸ்வாமிகளே! kaanmin,காண்மின் - (ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்; silaiyinaal,சிலையினால் - வில்லாலே ilangai setra,இலங்கை செற்ற - இலங்கையை நாசஞ்செய்த devane,தேவனே - எம்பெருமானே devan aavan,தேவன் ஆவான் - ஸர்வேஸ்வரனெனப்படுவான் |
| 879 | திருமாலை || (எம்பெருமானுடைய வைபவத்தை பொறாதவர்கள் கொல்லத் தக்கவர் என்கிறார்) 8 | வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே | arangamaanakarulaane!;,அரங்கமாநகருளானே!-; - கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது அவதாரத்தில் பிற்பாடர் ஆனவருடைய விரோதிகளை போக்குகைக்காக அன்றோ என்கிறார் verupodu,வெறுப்பொடு - (பகவத் விஷயத்தைகு கேட்கவும் பொறாத) வெறுப்போடு கூடிய samanar,சமணர் - க்ஷபணர்களும் mundar,முண்டர் - சைவர்களும் vidhiil,விதிஇல் - பாக்கிய ஹீனரான saakiyar kal,சாக்கியர்கள் - பௌத்தர்களும் nin pal,நின் பால் - உன் விஷயத்திலே poruppu ariyanakal,பொறுப்பு அரியனகள் - பொறுக்க முடியாத சில வார்த்தைகளை pesil,பேசில் - சொல்லுவார்களாகில் adhuve noy aagi,அதுவே நோய் ஆகி - அந்த நிந்தைகளைக் கேட்டதே வியாதியாய் poovathu,போவது - முடிந்து போவது (உத்தமம் அங்ஙனன்றியே) enakku,எனக்கு - (பகவத் விரோதிகளின் ஸத்தையையும் பொறாத) எனக்கு kuruippu adaiyum aagil,குறிப்பு அடையும் ஆகில் - இலக்கு வாய்க்குமாகில் koodumael,கூடுமேல் - (அதற்கு மேல்) (எனக்கு சக்தியும்) கூடுமாகில் aangae,ஆங்கே - உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே thalaiyai aruppadhae,தலையை அறுப்பதே - அவன் தலையை அறுத்துத் தள்ளுகையே karumam kandaiya,கருமம் கண்டாய் - செய்யத் தக்கது காண் |
| 880 | திருமாலை || (இசைந்தவர்களை -நோக்கி நீங்கள் சர்வ ஸூலபனான கண்ணபிரானைப் பணிமின் என்கிறார்) 9 | மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள் உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே | madhi ila,மதி இலா - தத்துவ ஞானமில்லாத maanidangal,மானிடங்காள் - மனிதர்களே matrum,மற்றும் - (நான் சொல்லுகிறவனைத்) தவிரவும் oor dheivam,ஓர் தெய்வம் - (சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம் undae,உண்டே - உண்டோ? (இல்லை) neengal,நீங்கள் - நீங்கள் uttra podhu andri,உற்ற போது அன்றி - (சரணமடைந்த அந்த க்ஷுத்ர தேவர்கட்கு) ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல் (மற்றைக் காலத்தில்) oruvan endru,ஒருவன் என்று - (நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை unar mateer,உணர மாட்டீர் - அறிய மாட்டீர்கள் (நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே) mel,மேல் - (பதப் பொருளுக்கு) மேற்பட்ட atram,அற்றம் - மறை பொருளை (தாத்பரியத்தை) onru ariyeer,ஒன்று அறியீர் - சிறிதும் அறிய மாட்டீர்கள்; avan allaal,அவன் அல்லால் - (இனி முடிவுப் பொருளை நீங்கள் உணருமாறு கூறுவேன்;) அந்த எம்பெருமான் தவிர theivam illai,தெய்வம் இல்லை - (சரணமடையக் கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை; (ஆகையால்) kanru inam meytha endhai,கன்று இனம் மேய்த்த எந்தை - கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு), மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய kazhal inai,கழல் இணை - இரண்டு திருவடிகளையும் neer panimin,நீர் பணிமின் - நீங்கள் சரணமாகப் பற்றுங்கள். |
| 881 | திருமாலை || (விபவ அவதாரங்களுக்கு பிற்பட்டவருக்கும் உதவும்படி திருவரங்கம் பெரிய கோயிலிலே வந்து கிடக்கிறான் என்கிறார்) 10 | நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச் சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே | engum,எங்கும் - எல்லா விடங்களிலும் Deivam,தெய்வம் - (அம்மன் பிடாரி முதலான தாமஸ) தேவதைகளை naattinaan,நாட்டினான் - (ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் ஆஸ்ரயிக்கலாம்படி எம்பெருமான்) நிலை நிறுத்தி uybhavargku,உய்பவர்க்கு - உஜ்ஜீவிக்க விரும்புமவர்கட்கு uyum vannam,உய்யும் வண்ணம் - உஜ்ஜீவிக்கலாம்படி nallathu or arul thannaale,நல்லது ஓர் அருள் தன்னாலே - தனது ஒப்பற்றதொரு க்ருபையினால் thiruarangam,திருஅரங்கம் - அரங்க மா நகரை kaattinaan,காட்டினான் - காண்பித்தருளினான் nambimeerkaal,நம்பிமீர்காள் - ‘நமக்கு ஒன்றாலும் குறையில்லை’ என்று நினைந்திருப்பவர்களே! ketrae,கேட்டிரே - (நான் சொல்வதைக்) கேட்டீர்களா? garuda vaaganan nirgavum,கெருட வாகனன் நிற்கவும் - கருடனை வாஹநமாக வுடைய பெருமான் விளங்கா நிற்கச் செய்தேயும் saettai than madiyagathu,சேட்டை தன் மடியகத்து - (தேவதாந்தரங்களைப் பற்றுகிற நீங்கள்) மூதேவியிடத்தினின்றும் selvam paarthu irukkireer aishwaryam pera ninaithirukkiral polum,செல்வம் பார்த்து இருக்கின்றீர் - ஐஸ்வர்யம் பெற நினைத்திருக்கிறீர்கள் போலும் |
| 882 | திருமாலை || (திருவரங்கம் என்னப் பெறாதவர்கள் கர்ப்ப நிர் பாக்யர் -என்கிறார்) 11 | ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே | oru villaal,ஒரு வில்லால் - சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே oongu munneer adaittu,ஓங்கு முந்நீர் அடைத்து - கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி ulangal uyya,உலகங்கள் உய்ய - லோகமெல்லாம் வாழும்படி seruvile,செருவிலே - போர்க் களத்திலே arakkar konai,அரக்கர் கோனை - இராவணனை setra,செற்ற - முடித்தருளின nam sevaganar,நம் சேவகனார் - நமக்குத் தலைவரும் மஹா வீரருமான பெருமாள் maruyia,மருவிய - பொருந்தி வாழ்வதற்கு இடமான periya koyil,பெரிய கோயில் - பெருமை தங்கிய கோயிலாவது madhil thiruarangam,மதிள் திரு அரங்கம் - ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்க க்ஷேத்ரம் ennaa,என்னா - என்று சொல்ல மாட்டாத karuvile thiru ilaadheer,கருவிலே திரு இலாதீர் - கர்ப்ப நிர்ப் பாக்யர்களே! kaalathai,காலத்தை - (பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை kazhikkinreer,கழிக்கின்றீர் - பாழே போக்குகிறீர்களே! |
| 883 | திருமாலை || (தாம் பெற்றாலும் பிறர் படும் அனர்த்தைப் பொறுக்க மாட்டேன் என்கிறார் ) 12 | நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே | namanum,நமனும் - யம தர்ம ராஜாவும் murukalanum,முற்கலனும் - முத்கல பகவானும் ஒருவர்க்கொருவர் paesa,பேச - வார்த்தை யாடிக் கொண்டிருக்க naragil nindraar kalakk,நரகில் நின்றார்கள் கேட்க - அந்த வார்த்தை நரகத்திலே பாப பலன்களை அனுபவிக்கிற பாவிகளின் காதில் பட்டவளவிலே naragame,நரகமே - அந்த நரகந்தானே suvarkkam aagum,சுவர்க்கம் ஆகும் - ஸ்வர்க்க லோகமாய் விட்டது என்று சொல்லுதற்கீடான மேன்மை வாய்ந்த naamangal udaiya,நாமங்கள் உடைய - திருநாமங்களை யுடைய nambi avanathu,நம்பி அவனது - பரிபூரண எம்பெருமானுடைய oor,ஊர் - திவ்ய தேசம் arangam ennaadhu,அரங்கம் என்னாது - திருவரங்கமாகும் என்று சொல்லாமல் alia maandhar,அளிய மாந்தர் - அருமந்த மனுஷ்யர்கள் ayarndhu - (swaroopaththai) marandhu,அயர்ந்து -(ஸ்வரூபத்தை) மறந்து - (ஸ்வரூபத்தை) மறந்து veenndhu,வீழ்ந்து - (விஷயாந்தரப் படுகுழியிலே) விழுந்து kavalaiyul paduginraar endru,கவலையுள் படுகின்றார் என்று - துக்கத்திலே அகப்படுகிறார்களே என்று adhanukkae,அதனுக்கே - அதற்காகவே kavalkindrein,கவல்கின்றேன் - நான் கவலைப் படா நின்றேன். |
| 884 | திருமாலை || (எல்லாரும் திரு நாமத்தை அனுசந்தித்து உஜீவிக்கக் கூடுமோ -என்று மநோரதித்தார்) 13 | எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம் வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே | eriyum neer veri kol velai,எறியும் நீர் வெறி கொள் வேலை - அலைகள் வீசுகின்ற தண்ணீரையும் (புலாலின்) நாற்றத்தையும் கொண்டிருக்கிற கடலினாற் சூழப்பட்ட maa nilathu,மா நிலத்து - பெரிய இந்தப் பூலோகத்திலுள்ள uyirkal ellaam,உயிர்கள் எல்லாம் - ஆத்மாக்கள் யாவும் veri kol poo thulabam maalai,வெறி கொள் பூ துளபம் மாலை - நல்ல பரிமளமுடைய அழகிய திருத் துழாய் மாலையை அணிந்துள்ள vinnavar konai,விண்ணவர் கோனை - தேவாதி தேவனான திருமலை aetha,ஏத்த - தோத்திரம் பண்ணுவதற்காகவே (ஏற்பட்டிருக்கின்றன) arivu ilaa manidhar ellaam,அறிவு இலா மனிதர் எல்லாம் - ((அவ்வாறு துதிப்பது அற்ப ஞானமுடையார்க்கு முடியா விடினும்) தத்வ ஜ்ஞானம் நிரம்பாத அந்த மனிதர் யாவரும் arangam endru alaippar aagil,அரங்கம் என்று அழைப்பர் ஆகில் - அபுத்தி புர்வமாகவாகது ஸ்ரீரங்கமென்று சொல்லுவர்களானால் (அம் மாத்திரத்தாலேயே) poriyin vaal,பொறியின் வாழ் - பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு வாழ்கின்ற naragam ellaam,நரகம் எல்லாம் - (ஞானிகளுக்கு நரகமாகிய ) இப் பிரபஞ்சம் முழுதும் pul ezhu unthu,புல் எழுந்து - புல் முளைத்து ozhiyum andae,ஒழியும் அன்றே - பாழாய்ப் போய் விடுமென்றோ |
| 885 | திருமாலை || (பகவத் விரோதிகளோடு இதுவரை தமக்கு இருந்த சம்பந்தத்தால் வந்த விடாய் தீர திரு நாமத்தை வாயாரப் பேசுகிறார் ) 14 | வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே | vandu inam muralum solai,வண்டு இனம் முரலும் சோலை - வண்டுகளின் கூட்டங்களானவை காநம் செய்யா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும், mayil inam aalum solai,மயில் இனம் ஆலும் சோலை - மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும் kondal meedhu anavum solai,கொண்டல் மீது அணவும் சோலை - மேகங்களானவை மேலே வந்து படியா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும் kuyil inam koovum solai,குயில் இனம் கூவும் சோலை - குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும், andar kon amarum solai,அண்டர் கோன் அமரும் சோலை - தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சோலைகளை ani,அணி - ஆபரணமாக வுடையதுமான thiru arangam ennaa,திருஅரங்கம் என்னா - ஸ்ரீரங்கம் என்று சொல்ல மாட்டாத mindar,மிண்டர் - நன்றி யறிவில்லாத மூர்க்கர்கள் paayndhu unnum soatrai,பாய்ந்து உண்ணும் சோற்றை - மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை vilakki,விலக்கி - (அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து neer naaykku idumin,நீர் நாய்க்கு இடுமின் - நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள். |
| 886 | திருமாலை || (சம்பந்த உணர்ச்சியைப் பெருக்கின வாற்றை பேசுகிறார்) 15 | மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான் உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர் ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே | pul kodi udaiya gomaan,புள் கொடி உடைய கோமான் - கருடனைக் கொடியாக வுடைய ஸ்வாமியான திருமால் vidhi ilaa ennai pol,விதி இலா என்னை போல - (நெடுங்காலம் எம்பெருமானது அருளைப் பெறுதற்கு ஏற்ற) நல்வினை இல்லாதிருந்த என்னைப் போல meyyarkku,மெய்யர்க்கு - அத்வேஷ மாத்திரமுடையவர்க்கு meyyan aagum,மெய்யன் ஆகும் - (தன் ஸ்வரூபத்தை) உள்ளபடி காட்டித் தருவன்; poyyarkku,பொய்யர்க்கு - (எம்பெருமான் விஷயத்தில்) அத்வேஷத்தைப் பெற்றிராதவர்க்கு poyyan aagum,பொய்யன் ஆகும் - (எம்பெருமான் விஷயத்திலே பகைமை கொண்டிருப்பவர்க்கு) (தனது ஸ்வரூபத்தைக் காட்டித் தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்; uyyappom unarvinarkku,உய்யப்போம் உணர்வினார்கட்கு - உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு) oruvan endru unarndha pinnaai,ஒருவன் என்று உணர்ந்த பின்னை - ‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு aiyyappaadu aruthu,ஐயப்பாடு அறுத்து - பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி thondrum,தோன்றும் - ஸேவை ஸாதிக்கிற azhagan,அழகன் - அழகை யுடைய அந்த எம்பெருமானது oor,ஊர் - இருப்பிடம் arangam andrae,அரங்கம் அன்றே - திருவரங்கமாகும்; (அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்) |
| 887 | திருமாலை || (விஷயத்துக்கு தகுதியாக பக்தியை பெருக்கின படியை பேசுகிறார்) 16 | சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம் மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால் ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே | soodhan aay,சூதன் ஆய் - (முதலில்) சூதிலே ஊன்றினவனாய் kalvan aagi,கள்வன் ஆகி - (பிறகு) களவிலே ஆழ்ந்தவனாய் thooratharoatu isaindha kaalam,தூர்த்தரோடு இசைந்த காலம் - விஷயாந்தர ப்ரவணரோடே பொருந்தியிருந்த காலத்திலே maatharaar,மாதரார் - ஸ்திரீகளுடைய kayal kan yennum,கயல் கண் என்னும் - கயல் போன்ற கண்களாகிற valaiyul pattu,வலையுள் பட்டு - வலையினுள்ளே அகப்பட்டு alundhuvaenai,அழுந்துவேனை - அழுந்திக் கிடக்கிற என்னை podhare endru soll,போதரே என்று சொல்லி - ‘அடா! இப்படி வா’ என்று அருளிச் செய்து pundhiyil pugandhu,புந்தியில் புகந்து - என் மணஸிலே வந்து புகந்து thanpaal aadaram peruga vaitha azhagan,தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன் - தன்னிடத்திலே அன்பை வளரச் செய்த அழகை யுடைய எம்பெருமானது oor,ஊர் - இருப்பிடம் arangam andrae,அரங்கம் அன்றே - திருவரங்கமாகும்; (அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்) |
| 888 | திருமாலை || (தமது கண்கள் களித்தபடியைப் பேசுகிறா) 17 | விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம் சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்ட என் கண்ணினை களிக்குமாறே | virumbi nindru,விரும்பி நின்று - ஆதாரத்தோடே ஒருபடிப்பட நின்று aetha maatten,ஏத்த மாட்டேன் - ஸ்தோத்ரம் பண்ண மாட்டாதவனா யிரா நின்றேன்; vidhi ilaen,விதி இலேன் - (கை கூப்புதல் முதலிய) காயிக வ்யாபாரங்களும் செய்யப் பெறாதவனாயிரா நின்றேன், madhi ondru illai,மதி ஒன்று இல்லை - (‘ஈஸ்வரன் ஒருவன் உண்டு என்கிற) ஒரு அறிவும் (எனக்கு) இல்லை; irumbu pol valiya nenjam,இரும்பு போல் வலிய நெஞ்சம் - (இப்படிப்பட்ட என்னுடைய) இரும்பைப் போல் கடினமான கல் நெஞ்சானது irai irai urugum vannam,இறை இறை உருகும் வண்ணம் - கொஞ்சம் கொஞ்சமாக உருகும்படி; surumbu amar,சுரும்பு அமர் - வண்டுகள் பொருந்திய solai suuzhnda,சோலை சூழ்ந்த - சோலைகளாலே சூழப்பட்ட maa arangam,மா அரங்கம் - மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை kovil kond,கோயில் கொண்ட - இருப்பிடமாகத் திரு வுள்ளம் பற்றின karumpinai,கரும்பினை - பரம யோக்யனான எம்பெருமானை en kan inai,என் கண் இணை - எனது இரண்டு கண்களும் kandu kondtu,கண்டு கொண்டு - பார்த்த வண்ணமாய் kalikkum aaru ye,களிக்கும் ஆறு ஏ - மகிழ்ச்சி யடைகிற விதம் என்னே? (என்று ஆச்சர்யப்படுகிறபடி.) |
| 889 | திருமாலை || (கண் களிப்பு புற வெள்ளம் இட்டபடியைப் பேசுகிறார்) 18 | இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு திரு மாலோ என் செய்கேன் பாவியேனே | thirai thivalai,திரை திவலை - அலைகளிலுண்டான திவலைகளானவை inidhu modha,இனிது மோத - இனிதாக அடிக்க (வீச) eriyum,எறியும் - கொந்தளிக்கிற than,தண் - குளிர்ந்த paravai meedhu,பரவை மீது - கடல் போன்ற திருக் காவேரியிலே thani kidandhu,தனி கிடந்து - தனியே வந்து கண் வளர்ந்தருளி arasu seyyum,அரசு செய்யும் - செங்கோல் செலுத்துகிற thaamarai kannan,தாமரை கண்ணன் - புண்டரீகாக்ஷனாய் emmaan,எம்மான் - எமக்கு தலைவனாய் kani irundhanaiya sem vaai kannanai,கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை - கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை யுடையனான கண்ண பிரானை kandu kondru,கண்ட கண்கள் - ஸேவிக்கப் பெற்ற (எனது) கண்களில் நின்றும் pani arumpu,பனி அரும்பு - குளிர்ந்த கண்ண நீர்த் துளிகள் udhirum,உதிரும் - பெருகா நின்றன, paaviyaen,பாவியேன் - (கண்ணாரக் கண்டு களிக்கைக்குப்) பாக்கியமில்லாத நான் en seydhaen,என் செய்தேன் - ஏது செய்வேன்? |
| 890 | திருமாலை || (உடல் உருகின படி சொல்கிறார்) 19 | குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக் கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே- (உடல் நெக்கு உருகுமாலோ பாட பேதம் -நெக்கு கரைந்து) | ulagatheere,உலகத்தீரே - உலகத்திலுள்ளவர்களே! kadal niram kadavul,கடல் நிறம் கடவுள் - கடல் போன்ற கரு நிறத்தை யுடைய கடவுளான endhai,எந்தை - எம்பெருமான் kudathisai,குடதிசை - மேற்கு திக்கில் mudiyai vaithu,முடியை வைத்து - திருமுடியை வைத்தருளியும் guna thisai,குண திசை - கிழக்குத் திக்கில் padham neetti,பாதம் நீட்டி - திருவடிகளை நீட்டியும் vada thisai,வட திசை - வடக்குத் திக்கிலே pinpu kaatti,பின்பு காட்டி - (தனது) பின்புறத்தைக் காட்டியும் then thisai,தென் திசை - தெற்குத் திக்கில் ilankai,இலங்கை - (விபீஷணன் வாழுமிடமான) லங்கையை nokki,நோக்கி - (அன்போடு) பார்த்துக் கொண்டும் aravum anai,அரவும் அணை - திருவனந்தாழ்வானாகிற படுக்கையில் thuyilum aa,துயிலும் ஆ - யோக நித்திரை செய்யுந் தன்மையை kandu,கண்டு - காண்பதனால் udal enakku urugum,உடல் எனக்கு உருகும் - எனக்கு உடல் உருகும் aalo,ஆலோ - ஐயோ en seyvaen,என் செய்வேன் - (நான்) என்ன செய்ய மாட்டுவேன் |
| 891 | திருமாலை || (எம்பெருமான் உடன் உறவு அறிந்தவருக்கு அகல ஒண்ணாது -என்கிறார்) 20 | பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும் ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே | paayum neer,பாயும் நீர் - பாயா நின்றுள்ள காவிரி சூழ்ந்த arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே paampu anai,பாம்பு அணை - சேஷ சயநத்திலே palli kond,பள்ளி கொண்ட - கண் வளர்ந்தருளா நின்ற maragatham uruvum,மரகதம் உருவும் - மரகத மணி போன்ற திருமேனி நிறமும் thoalum,தோளும் - திருத் தோள்களும் thooiya thaamarai kangalum,தூய தாமரை கண்களும் - பரிசுத்தமான தாமரை மலர் போன்ற திருக் கண்களும் thuvar ithazh,துவர் இதழ் - சிவந்த அதரமும் pavalam vaayum,பவளம் வாயும் - பவளம் போன்ற வாயும் maayanaar,மாயனார் - ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது thiru nal maarvum,திரு நல் மார்வும் - பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும். aaya seer mudiyum,ஆய சீர் முடியும் - வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும் thaesum,தேசும் - (இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும். adiyaroarkku,அடியரோர்க்கு - ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு akalalaamo,அகலலாமோ - இழக்கத் தகுமோ? |
| 892 | திருமாலை || (மனசால் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார்) 21 | பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்குத் துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில் மணியினார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே | pavalam vaay,பவளம் வாய் - பவளம் போன்ற அதரத்தை யுடைய aranganaarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளன் விஷயத்திலே panivinaal,பணிவினால் - கைங்கர்ய ருசியால் manam adhu ondri,மனம் அது ஒன்றி - கருத்தைப் பொருந்த வைத்து thunivinaal,துணிவினால் - துணிவுடன் vaazha maatta,வாழ மாட்டா - வாழ மாட்டாத thollai nenje,தொல்லை நெஞ்சே - கிழத்தனமுள்ள மநஸ்ஸே! aniyin aar,அணியின் ஆர். - அழகினாலே பூர்ணமாய் sem pon aaya aruvarai anaiya,செம் பொன் ஆய அருவரை அணைய - செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த kovil,கோயில் - கோயிலிலே mani anaar,மணி அனார் - நீல மணி போன்ற எம்பெருமான் kidandha aatrai,கிடந்த ஆற்றை - கண் வளர்ந்தருளுகிற படியை manathinaal,மனத்தினால் - நெஞ்சினால் ninaithal aame,நினைத்தல் ஆமே - (அளவிட்டு அறியக் கூடுமோ? nee sollaay,நீ சொல்லாய் - நீயே சொல்லிக் காண் |
| 893 | திருமாலை || (பாசுரம் இட்டு பேச ஒண்ணாது என்கிறார்) 22 | பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன் மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் | pedhai nenje,பேதை நெஞ்சே - விவேகமற்ற மனமே pesittrae,பேசிற்றே - (வேதங்களும் வைதிக புருஷர்களும்) பேசின பேச்சுக்களையே pesal allaal,பேசல் அல்லால் - (நாமும்) பேசுவதே யல்லாமல் perumai,பெருமை - (எம்பெருமானது) மேன்மையிலே maasu attrar manathu ulaanai,மாசு அற்றார் மனத்து உளானை - குற்றமற்ற பெரியோர்களின் நெஞ்சில் நித்ய வாஸம் செய்யுமவனே naam vanangi iruppadhu allaal,நாம் வணங்கி இருப்பது அல்லால் - நாம் வணங்கிக் கொண்டு காலங்கழிக்கலா மத்தனை யொழிய ondru,ஒன்று - ஏக தேசமும் unaral aagadhu,உணரல் ஆகாது - அறிய முடியாது; aasu attrar thangatku allaal,ஆசு அற்றார் தங்கட்கு அல்லால் - உபாயாந்தரப் பற்றாகிற குற்ற மற்றவர்களுக்கு தவிர (மற்றையோர்க்கு) ariyal aavaanum allan,அறியல் ஆவானும் அல்லன் - அறிய முடியாதவனா யுமிரா நின்றான் (அவன்;) pesa thaana aavadhu undoh,பேச தான் ஆவது உண்டோ - (அவன் பெருமைக் கீடாகப்) பாசுரமிட்டுப் பேசும் படியா யிராநின்றதோ? நீ சொல்லாய் |
| 894 | திருமாலை || (மறக்க முடியாது என்கிறார்) 23 | கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப் பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே | ezhaiyaen,ஏழையேன் - (எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்) பேதைமைக் குணத்தையுடைய நான் gangaiyin punitham aaya kaaviri naduvu paattu,கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு - கங்கா நதியிற் காட்டிலும் பரிசுத்தி யுடையதாகிய காவேரி நதியினது நடுவிடத்திலே pongu neer,பொங்கு நீர் - பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந் நதியின்) நீர்ப் பெருக்கு parandhu paayum,பரந்து பாயும் - எங்கும் பரவிப் பாய்தற்கிட மானதும் poo pozhil,பூ பொழில் - அழகிய சோலைகளை யுடையதுமாகிய arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே engal maal,எங்கள் மால் - (அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும் iraivan,இறைவன் - ஸர்வ ஸ்வாமியும் eesan,ஈசன் - ஸர்வ நியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன் kidandhadhu or kidakkai,கிடந்தது ஒர் கிடக்கை - சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளி கொண்ட திருக் கோலத்தை kandum,கண்டும் - ஸேவிக்கப் பெற்ற பின்பும் marandhu,மறந்து - (அந்த கிடை யழகை) மறந்து போய் enganam vaazhkaen,எங்ஙனம் வாழ்கேன் - எவ்வாறு தரித்திருப்பேன் யான்? ezhaiyaney,ஏழையனே - ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன். |
| 895 | திருமாலை || (பிறந்த பக்தி விஷயத்துக்கு தகுதியாக இல்லாமையாலே அது க்ரித்ரிமம் என்கிறார்) 24 | வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்; கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும் உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய் கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே | vellam neer,வெள்ளம் நீர் - பெருக்கை யுடைய காவேரி யானது parandhu paayum,பரந்து பாயும் - எங்கும் பரவிப் பாய்தற்கு இடமானதும் viri pozhi,விரி பொழில் - விசாலாமான சோலைகளை யுடையதுமான arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே, kalvanaar,கள்வனார் - அடியவர்களைக் கொள்ளை கொள்ளுமவனான அழகிய மணவாளன kidandhu aarum,கிடந்து ஆறும் - பள்ளிக் கொள்ளும்படியையும் kamalam nal mugamum,கமலம் நல் முகமும் - தாமரை மலர் போல் அழகிய திருமுகத்தையும் kandum,கண்டும் - ஸேவிக்கப் பெற்ற பின்பும் ullame,உள்ளமே - ஓ நெஞ்சே! valiyai polum,வலியை போலும் - நீ கல்லாகிராநின்றாய் போலும்! oruvan endru,ஒருவன் என்று - அவன் ஒப்பற்றவனென்று unara maattaay,உணர மாட்டாய் - அறிய மாட்டாய் (இவ் விஷயத்தில்) kallam kaatale ceytu,கள்ளம் காதலே செய்து - கபடமான பக்தியையே செய்து கொண்டு un kallatthe,உன் கள்ளத்தே - உனது கபடச் செய்கையிலேயே kalikkindraaye,கழிக்கின்றாயே - காலத்தை கழிக்கிறாயே! |
| 896 | திருமாலை || (சாஸ்த்ரீயமான பக்தி முதலியவை ஒன்றும் இல்லை என்கிறார்) 25 | குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன் களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன் அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே | arangamaanakarulaane,அரங்கமாநகருளானே - தம்தாமுக்கு என்ன ஒரு முதல் இல்லாதவரை ரஷிக்கைக்காக வன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று kulithu,குளித்து - ஸ்நாநம் பண்ணி moondru analai,மூன்று அனலை - மூன்று அக்நிகளை ombum,ஓம்பும் - வளர்ப்பதற்குரிய யோக்யதையைத் தருவதும் kuri kol,குறி கொள் - கஷ்டப்பட்டுக் காப்பாற்றத் தக்கதுமான andhanamai thannai,அந்தணமை தன்னை - ப்ராஹ்மண்யத்தை olitthiten,ஒளித்திட்டேன் - பாழாக்கி விட்டேன்; en kan illai,என் கண் இல்லை - (ஆத்ம விஷய ஜ்ஞானம்) என் பக்கல் இல்லை; en kan pattanum allen,என் கண் பத்தனும் அல்லேன் - உன் விஷயமான பக்தியும் உடையவனல்லேன் நான்; (இப்படியிருக்க) kadal vanna nambee,கடல் வண்ணா நம்பீ - ஒரு கடலோடு ஸ்ப்ர்தை பண்ணி ஒரு கடல் சாய்ந்தால் போலே இறே பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறது en konduppadhu,என் கொண்டு களிப்பது - (நான்) எத்தைக் கொண்டு ஆநந்த்தமடைவேன் katharukindraene,கதறுகின்றேன் - (துக்கத்துக்குப் போக்கு வீடாக) வாய் விட்டுக் கூப்பிடா நின்றேன் (ஆதலால்) enakku,எனக்கு - என் விஷயத்தில் alithu arulsei,அளித்து அருள்செய் - மிகவும் கிருபை செய்தருள வேணும் |
| 897 | திருமாலை || (ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு உள்ள நன்மை இல்லை என்கிறார்) 26 | போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன் காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே | podhu ellaam,போது எல்லாம் - எல்லாக் காலங்களிலும் podhu kondhu,போது கொண்டு - பூக்களைக் கொண்டு un pon adi punaiya maatten,உன் பொன் அடி புனைய மாட்டேன் - உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்; theedhu ilaa mozhihal kondhu,தீது இலா மொழிகள் கொண்டு - குற்றமற்ற சொற்களினால் un thiru gunam seppa maatten,உன் திருக் குணம் செப்ப மாட்டேன் - உன்னுடைய நற் குணங்களைக் கீர்த்தநம் செய்ய மாட்டுவேனல்லேன்; kaadhalaal anbu,காதலால் அன்பு - உண்மையான பக்தியால் உண்டாகிற அபிநிவேசத்தை nenjam,நெஞ்சம் - நெஞ்சிலே kalanthilaene,கலந்திலேன் - வைத்துக் கொண்டிருக்கின்றேனில்லை; adhu thannaale,அது தன்னாலே - ஆதலால் arangarkku,அரங்கர்க்கு - அழகிய மணவாளனாகிய தேவரீர்க்கு edhilae,ஏதிலேன் - ஒரு காரணத்தாலும் ஸ்பர்சிக்கப் பெற்றவனல்லேன்; en seyvaan thoandrinaene,என் செய்வான் தோன்றினேனே - (இப்படிப்பட்ட நான்) எதற்காகப் பிறந்தேனோ (அறியேன்) elle,எல்லே - ஐயோ! |
| 898 | திருமாலை || (திர்யக் ஜந்துக்களுக்கு உள்ள நன்மையையும் இல்லை என்கிறார்) 27 | குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித் தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன் மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே | kurangugal,குரங்குகள் - வாநர வீரர்கள் (கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறுவதற்கு) malaiyai nookka,மலையை நூக்க - மலைகளைத் தள்ளிக் கொண்டு வர kulithu purandittu oodi,குளித்து புரண்டிட்டு ஓடி - நீரிலே முழுகி (கரையிலுள்ள உலர்ந்த மணலிலே) புரண்டு ஓடி tharangam neer adai kal uttra,தரங்கம் நீர் அடைக்கல் உற்ற - அலைக் கிளர்ச்சியை யுடைய கடலைத் தூர்க்கையிலே ஒருப்பட்ட salam ilaa,சலம் இலா - கபடமற்ற anilum polen,அணிலும் போலேன் - அணில்களையும் ஒத்திருக்கின்றேனில்லை; marangal pol valiya nenjam,மரங்கள் போல் வலிய நெஞ்சம் - மரங்களைப் போலே கடிநமான நெஞ்சை யுடையனாய் vanjanen,வஞ்சனேன் - வஞ்சநையையே தொழிலாக யுடையனாய் aliyathen,அளியத்தேன் - அருமந்த மநுஷ்யனான நான் aranganaarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளனுக்கு nenju thannaal,நெஞ்சு தன்னால் - பாவநா வ்ருத்தியாலுங்கூட aal seyyaadhae,ஆள் செய்யாதே - அடிமை செய்யாமல் ayarkinraen,அயர்க்கின்றேன் - அநர்த்தப்படா நின்றேன். |
| 899 | திருமாலை || (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தான் இடர் பட்ட பொழுது நினைத்த நினைவும் இல்லை என்கிறார்) 28 | உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச் செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே | umbaraal ariyal aaka oli ulaar,உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார் - தேவர்களாலும் (இவ் வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத தேஜோ மயமான பரம பதத்தை விபூதியாக வுடைய எம்பெருமான் aanai kaagi,ஆனைக்காகி - கஜேந்திராழ்வானுக்காக sembulaal undu vaazhum mudhalai mael seeri,செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி - சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு vandhaar,வந்தார் - (மடுவின் கரையிலே) எழுந்தருளினார். nam param aayadhu undey,நம் பரம் ஆயது உண்டே - (இப்படி ஆஸ்ரித பஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;) (நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பழுவுண்டோ? naaykalom sirumai ora,நாய்களோம் சிறுமை ஓரா - நாய் போல் நிஷ்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான empiraagu,எம்பிராற்கு - எம்பெருமானுக்கு aal seyyaadhae,ஆள் செய்யாதே - அடிமை செய்யப் பெறாமல் (இருக்கிற நான்) en seyvaan thoondrinaen,என் செய்வான் தோன்றினேன் - எதுக்காக பிறந்தேன்! |
| 900 | திருமாலை || (விலஷண தேச வாசமும் இல்லை என்கிறார்) 29 | ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே | paariL,பாரில் - இந்தப் பூமியிலே oor illen,ஊர் இலேன் - தேவரீர் உகந்திருக்கும் திருப்பதிகளிலே பிறக்கப் பெற்றிலேன்; kaani illai,காணி இல்லை - (திருப்பல்லாண்டு பாடுகை முதலானவற்றுக்காக விடப்பட்ட) காணியாட்சியும் எனக்கில்லை; uravu illai,உறவு இல்லை - பந்துக்களுமில்லை; matru oruvar illai,மற்று ஒருவர் இல்லை - தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை. nin paadam moolam,நின் பாதம் மூலம் - தேவரீருடைய திருவடிகளையும் patru illen,பற்றிலேன் - (தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்; paramamooruthi,பரமமூர்த்தி - மிகச் சிறந்தவனே! kaar oli vannane,கார் ஒளி வண்ணனே - மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே! kannaane,கண்ணனே - ஸ்ரீ க்ருஷ்ணனே! kadharugiren,கதறுகின்றேன் - (வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்; amma,அம்மா - ஸ்வாமிந்! arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - உடையவன் ஆனாலும் சந்நிஹிதன் அல்லன் என்று தான் ஆறி இருக்கிறேனோ சம்சாரத்தில் நன்மை பெற வேணும் என்று கூப்பிடுவாரும் உண்டாக கூடுமோ என்னும் நப்பாசையாலே அன்றோ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது kalai kan aar ular,களை கண் ஆர் உளர் - (உன்னை யொழிய வேறு ரக்ஷகர் யார் இருக்கிறார்! |
| 901 | திருமாலை || (இவை இல்லாமை மாத்ரமே அன்றியே பிறர்க்கு அநர்த்தத்தை விளைவிப்பவனாய் இரா நின்றேன் என்கிறார்) 30 | மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே | punam thulaai maalaiyaane,புனம் துழாய் மாலையானே - தந் நிலத்திலே வளர்ந்து செவ்விதான திருத் துழாயை மாலையாக அணிந்துள்ளவனே! ponnii soozh thiru arangaa,பொன்னி சூழ் திரு அரங்கா - காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள்பவனே! ennai aal udaiya kovae,என்னை ஆள் உடைய கோவே - அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே! manathil,மனத்தில் - (என்) மநஸ்ஸிலே oor thooymai illai,ஓர் தூய்மை இல்லை - தெளிவு கொஞ்சமும் இல்லை; vaayil oor in sol illai,வாயில் ஓர் இன் சொல் இல்லை - வாயிலே ஒரு நற் சொல்லும் கிடையாது; vaalaa,வாளா - நிஷ் காரணமாக sinathinaal,சினத்தினால் - கோபத்தாலே setram nookki,செற்றம் நோக்கி - பகைமை தோற்றப் பார்த்து thee vili vilivan,தீ விளி விளிவன் - மிகக் கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்; enakku,எனக்கு - இப்படிப்பட்ட துர்க் குணங்கள் நிறைந்த எனக்கு ini kadhi en sollai,இனி கதி என் சொல்லாய் - இனி மேல் என்ன கதி? அருளிச் செய்ய வேணும். |
| 902 | திருமாலை || (நீச விஷயமான ஸ்த்ரீகளாலும் நிராகரிக்கப் பட்டேன் என்கிறார்) 31 | தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன் உவர்த்த நீர் போலே என் தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன் துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே | arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே! - கர்ம பரதந்த்ரராய் விஷயாந்தர பிரவணராய் இருப்பாரை அழகாலும் சீலத்தாலும் மீட்க்கைக்கு அன்றோ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது thavathulaar thammil allen,தவத்துளார் தம்மில் அல்லேன் - தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில் thanam padaitthaaril allen,தனம் படைத்தாரில் அல்லேன் - (ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்; endran utravarukku,என்றன் உற்றவர்க்கு - என்னைச் சேர்ந்தவர்களுக்கு uvartha neer pola,உவர்த்த நீர் போல - உப்புத் தண்ணீர் போல ondrum allen,ஒன்றும் அல்லேன் - ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன். thuvarttha sevvaayinaarkke,துவர்த்த செவ்வாயினார்க்கே - பழுப்பேறின அதரத்தை யுடைய மாதர்கட்கும் thuvakku ara,துவக்கு அற - ஸம்பந்தம் அற்றுப் போம்படி thurisan aaneen,துரிசன் ஆனேன் - கள்ளனாயினேன் piravi avathame thandhaay,பிறவி அவத்தமே தந்தாய் - (இப்படிப்பட்ட எனக்கு) ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய் |
| 903 | திருமாலை || (இப்படி இருவருக்கும் ஆகாதவன் திரு முன்பே வந்து நின்றது மூர்க்கத்தனம் என்கிறார்) 32 | ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள் கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே | vandu aarthu alampum solai ani,வண்டு ஆர்த்து அலம்பும் சோலை அணி - வண்டுகள் ஆரவாரம் செய்துகொண்டு அலைந்து கொண்டிரா நின்ற சோலைகளாலே அழகு பெற்றிருக்கிற thiruarangam thannul,திருஅரங்கம் தன்னுள் - ஸ்ரீரங்கத்திலே (பள்ளி கொண்டருளா நின்ற) kaarth thiral anaiya maeni kannane,கார்த் திரள் அனைய மேனி கண்ணனே - மேக ஸமூஹத்தை ஒத்த திருமேனியை யுடைய பெருமானே! unnai kaanum maargam ondru ariya maatta,உன்னை காணும் மார்க்கம் ஒன்று அறிய மாட்டா - உன்னை ஸாக்ஷாத்தரிக்கக் கூடிய உபாயமொன்றையும் அறிய மாட்டாதவனாய் manisaril,மனிசரில் - மனிதர்களுக்குள் thurisan aaya,துரிசன் ஆய - கள்ளனாய், moorkkaneen,மூர்க்கனேன் - பிடித்தது விடமாட்டாத மூடனாகிய அடியேன் vandu nindraeen,வந்து நின்றேன் - (வேறு புகலற்று, தேவர் திருமுன்பே) வந்து நின்றேன்; moorkkaneen moorkkaneen,மூர்க்கனேன் மூர்க்கனேன் - என்னுடைய தண்மையை நன்றாகக் கடாக்ஷித்தருள வேணுமென்றபடி. |
| 904 | திருமாலை || (வெட்கம் கேட்டவன் நான் -என்கிறார்) 33 | மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன் ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே | mei ellaam,மெய் எல்லாம் - மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும் poga vittu,போக விட்டு - நீக்கி விட்டு viri kulalaaril pattu,விரி குழலாரில் பட்டு - விரிந்த கூந்தலை யுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு) poi ellaam,பொய் எல்லாம் - எல்லா விதமான பொய்களையும் podhindu kond,பொதிந்து கொண்ட - நிறைத்துக் கொண்டிருக்கிற pozhkkanen,போழ்க்கனேன் - க்ருத்ரிமனான அடியேன் aiyane,ஐயனே - ஸ்வாமின்!! arangane!-;,அரங்கனே!-; - நம்மை -நிருபாதிக பந்து -என்று அறிந்தது சாஸ்திர வாசனையாலேயோ ஆச்சார்ய உபதேசத்தாலேயோ -என்ன அவைய்ற்றால் அன்று கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறபடியைக் கண்டு அறிந்தேன் un arul ennum aasai thannaal,உன் அருள் என்னும் ஆசை தன்னால் - தேவரீருடைய க்ருபையிலே யுண்டான ஆசையினாலே vandu nindren-;,வந்து நின்றேன்-; - வந்து நின்றேன்-; poiyanen poiyanen poiyanen,(நான் எப்படிப்பட்டவனென்றால்) பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன் - மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்; vandu nindren,வந்து நின்றேன் - (தேவர் திரு முன்பே வெட்க மற்று) வந்து நின்றேன். |
| 905 | திருமாலை || (இப்படிப்பட்ட நான் உன்னைக் கிட்டி உனக்கு அவத்யத்தை விளைப்பேன் அல்லேன் என்கிறார்) 34 | உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக் கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே | ullamathae uraiyum maalai,உள்ளத்தே உறையும் மாலை - நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை kallathen naanum,கள்ளத்தேன் நானும் - கள்ளனாகிய அடியேனும் thondu aay,தொண்டு ஆய் - (உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய் thondugge koolam poondu,தொண்டுக்கே கோலம் பூண்டு - அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து (irundha podhilum) ulluvaar ullamitru ellaam,(இருந்த போதிலும்) உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் - சிந்திப்பவர்கள் சிந்திப்பதெல்லாவற்றையும் ulluvaan unarvu ondru illaa,உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா - சிந்திப்பதற்குறுப்பான அறிவு சிறிதும் இல்லாத udan irundhu arithi endru,உடன் இருந்து அறிதி என்று - நீ கூடவே யிருந்து அறிகின்றாய் என்று (naan unarndhu) naan,(நான் உணர்ந்து) நான் - நான் en ullamae,என் உள்ளே - எனக்குள்ளே velkip poi,வெள்கிப்போய் - மிகவும் வெட்கப் பட்டு vilavu ara sirithittae,விலவு அற சிரித்திட்டேன் - விலாப் பக்கத்து எலும்பு முறியும்படி சிரித்தேன். (தொண்டுக்கே கோலம் பூண்டு வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேன் என்று அந்வயம்) |
| 906 | திருமாலை || நீர்மையால் சேர்த்துக் கொண்டான் என்கிறார் 35 | தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே | anru,அன்று - அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்) ulagam ellaam thaavi,உலகம் எல்லாம் தாவி - எல்லா உலகங்களையும் கடந்து thalai vilaak kondu endhaay,தலை விளாக் கொண்ட எந்தாய் - (திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே! sengkanmaale,செங்கண்மாலே - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே! aaviye,ஆவியே - (எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே! amudhe,அமுதே - அம்ருதம் போன்றவனே! en than aar uyir anaiya,என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் - (என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே! paaviyene,பாவியேன் - பாவியாகி யான் sikkena,சிக்கென - உறுதியாக (எப்போதும் விடாமல்) unnai allaal seviyene,உன்னை அல்லால் சேவியேன் - உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்; unnai allaal paaviyene,உன்னை அல்லால் பாவியேன் - (உன்னையல்லாது வேறொருவரை) நினைக்கவும் மாட்டேன் paaviyene,பாவியேனே - நான் பாவியனேயாவேன் |
| 907 | திருமாலை || (விசேஷ கடாஷம் பண்ண வேண்டும் என்று கதறுகிறார்) 36 | மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே | anru,அன்று - (இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக் காலத்திலே mun,முன் - (பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே mazhaikku,மழைக்கு - மழையைத் தடுப்பதற்காக varai aendhum maindhaney,வரை ஏந்தும் மைந்தனே - கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே! madhura aare,மதுர ஆறே - இனிய ஆறு போல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே! uzhaik kandrau pola noakkam udaiyar,உழைக் கன்று போல நோக்கம் உடையவர் - மான் குட்டியின் விழி போன்ற விழியை யுடைய மாதர்களின் valaiyul,வலையுள் - (அந்த நோக்காகிற) வலையினுள்ளே pattu,பட்டு - அகப்பட்டு uzhaikkintreku ennai,உழைக்கின்றேற்கு என்னை - துடிக்கிற என்னை noakka thozhivadhae,நோக்கா தொழிவதே - கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ? aadhi moorthi,ஆதி மூர்த்தி - முழு முதற் கடவுளே! arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - பரம பதத்தை விட்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது என்னுடைய ரஷணம் பண்ண அல்லவாகில் – இக் கிடைக்கு வேறு ஒரு பிரயோஜனம் உண்டோ unnai andrae,உன்னை அன்றே - தேவரீரை நோக்கி யன்றோ azhaikkindraen,அழைக்கின்றேன் - நான் கூப்பிடா நின்றேன். |
| 908 | திருமாலை || (அந்த விசேஷ கடாஷம் பெறாமல் அலை பாய்ந்தார்) 37 | தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும் ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார் எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே | thelivu ila kalangal neer soozh,தெளிவு இலா கலங்கல் நீர் சூழ் - (ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற thiru arangathul,திரு அரங்கத்துள் - கோயிலிலே oongum,ஓங்கும் - விஞ்சி யிருக்கிற oli ular thaamae andre,ஒளி உளார் தாமே அன்றே - தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே thandhayum thaayum aavaar,தந்தையும் தாயும் ஆவார் - (நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்; en thirathu,என் திறத்து - (அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது) eliyathu or arulum andrae,எளியது ஓர் அருளும் அன்றே - ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே? empiraanaar,எம்பிரானார் - எனக்கு உபகாரகரான அவர் nam paiyal aliyan ennaar,நம் பையல் அளியன் என்னார் - “நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை; amma o kodiya aare,அம்ம ஓ கொடிய ஆறே - கொடுமையா யிராநின்ற தீ! |
| 909 | திருமாலை || (இப்படி என்னை போல் பதறுகின்ற தொண்டரை உகக்குமவன் நீ என்கிறார்) 38 | மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக் காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே | punal soozi arangathaane,புனல் சூழ் அரங்கத்தானே - காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளுமவனே! maemporul,மேம்பொருள் - (ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை poga vittu,போக விட்டு - வாஸநையோடு விட்டிட்டு meymmeyai,மெய்ம்மையை - ஆத்ம ஸ்வரூபத்தை miga unarndhu,மிக உணர்ந்து - உள்ளபடி அறிந்து aam parisu,ஆம் பரிசு - ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும் arindhu kondu,அறிந்து கொண்டு - தெரிந்து கொண்டு aimbulan,ஐம்புலன் - ஐந்து இந்திரியங்களையும் agathu adakki,அகத்து அடக்கி - (விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி, kaambu ara,காம்பு அற - அடியோடே thalai siraittu,தலை சிரைத்து - தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து unn thalaik kada irundhu,உன் தலைக் கடை இருந்து - உனது திரு வாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து vaazhum,வாழும் - உஜ்ஜீவிக்கின்ற soomparai,சோம்பரை - (தம்முடைய ஹிதத்தில்) சோம்பி யிருக்குமவர்களை ugathu polum,உகத்தி போலும் - உகக்குமவனல்லையோ நீ. |
| 910 | திருமாலை || (அவர்களுக்கு பிறப்பின் தாழ்வால் ஒரு குறையும் இல்லை என்கிறார்) 39 | அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில் குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும் முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே | mutiyinil thulapam vaithaai,முடியினில் துளபம் வைத்தாய் - திரு முடியிலே திருத் துழாய் மாலையை அணிந்தவனே arangam maa nagar ulaane,அரங்கம் மா நகர் உளானே!-: - நிஹீன ஜன்மாக்களாய் உனக்கு நல்லராய் இருப்பார்க்கு முகம் கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது – உத்க்ருஷ்டருக்கு முகம் கொடுக்கும் இடத்தில் பரம பதத்திலே இருக்க அமையாதோ adimaiyil,அடிமையில் - (உனக்குக்) கைங்கரியம் செய்வதில் kudimai illa,குடிமை இல்லா - உயிர் குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத ayal,அயல் - (அடிமைக்கு) அயலான sadhuppaedhimaaril,சதுப்பேதிமாரில் - நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும். kudimaiyil kadai mai patta,குடிமையில் கடைமை பட்ட - குடிப் பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்) kookkaril,குக்கரில் - பரம சண்டாள ஜாதியில் pirappar yenum,பிறப்பர் ஏனும் - பிறப்பர்களானாலும் moy kalarku,மொய் கழற்கு - (உனது) நெருங்கிய திருவடிகளிடத்து anbu seyyum,அன்பு செய்யும் - பக்தி செய்கின்ற adiyarai,அடியரை - அடியார்களையே ugaththi poalum,உகத்தி போலும் - நீ விரும்புவாய் போலும் |
| 911 | திருமாலை || (அவர்களுக்கு பர ஹிம்சை முதலிய கொடிய கருமங்களின் பலன் அனுபவிக்க வேண்டா என்கிறார்) 40 | திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம் வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேலும் அருவினைப் பயனது உய்யார் அரங்க மா நகர் உளானே | thiru maru maarba,திரு மறு மார்ப - பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையும் திரு மார்பிலே அணிந்துள்ளவனே arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - இவை எல்லாம் அவதார சமயங்களிலே அன்றோ என்ன ஒண்ணாத படி அவதாரத்தில் பிற்பாடர்க்கு ஆக வன்றோ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுவது maa nilathu uyirgal ellaam,மா நிலத்து உயிர்கள் எல்லாம் - (இந்தப்) பெரிய பூ மண்டலத்திலே உள்ள ஜீவ ராசிகளெல்லாம் veruvu ura,வெருவு உற - (ஜகத் தெல்லாம்) நடுங்கும்படி konru suttittu,கொன்று சுட்டிட்டு - பர ஹிம்ஸை பண்ணி eittiya vinaiyar elum,ஈட்டிய வினையர் எலும் - விசேஷமாக ஸம்பாதிக்ப்பட்ட பாவங்களை யுடையவர்களானாலும் ninnai sindhaiyil thigazha vaithu,நின்னை சிந்தையில் திகழ வைத்து - உன்னை (தங்கள்) நெஞ்சில் விளங்கும்படி வைத்து maruviya manathar aagil,மருவிய மனத்தர் ஆகில் - த்ருடமான அத்ய வஸாயத்தை உடையராயிருப்பரேயானால் (அவர்கள்) aruvinai payan adhu uyyaar,அருவினை பயன் அது உய்யார் - (தாங்கள் செய்த) மஹா பாதகங்களினுடைய பலனை அநுபவிக்க மாட்டார்கள் |
| 912 | திருமாலை || (அவர்கள் தங்களோடு சம்பந்தம் பெற்றோரையும் பரிசுத்தம் ஆக்குமவர் என்கிறார்) 41 | வானுளார் அறியலாகா வானவா என்பாராகில் தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில் ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள் ஏனும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே | oonam aayinagal seyyum,ஊனம் ஆயினகள் செய்யும் - தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும். oona kaarakargal enum,ஊன காரகர்கள் ஏனும் - பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும். vaan ulaar ariyal aaga vaanavaa enbar aagil,வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் - மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாத தேவனே, என்று அநுஸந்திப்பராகில். thaen ulaam thulabam maalai senniyaa enpar aagil,தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில் - ‘தேன் பெருகா நின்ற திருத் துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில் poonagam seytha sedam,போனகம் செய்த சேடம் - (அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்) தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை tharuvar ael andrae,தருவர் ஏல் அன்றே - அநுக்ரஹிப்பாரானால் அப்போதே punitham,புனிதம் - (அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள் |
| 913 | திருமாலை || (அவர்கள் எம்பெருமானைப் போலே பூஜிக்க தக்கவர் என்கிறார்) 42 | பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே | madhil thiruvarangathaane!-;,மதிள் திருவரங்கத்தானே!-; - உபதேச மாத்ரமாய்ப் போகாதே கோயிலிலே வந்து லோக சாரங்க மகா முனிகள் தலையிலே திருப் பாண் ஆழ்வாரை அழைத்து இவ்வர்த்தத்தை வ்யாபரித்து காட்டிற்று இலீரோ கோயிலிலே மதிளைக் கடக்கில் அன்றோ தேவரீர் காட்டின இம் மரியாதையைக் கடக்கலாவது ozhugal aaru,ஒழுகல் ஆறு - பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில் paludhu ilaa,பழுது இலா - ஒரு குற்றமு மற்றிருக்குமவர்களாய் pala sadhupethimaargal,பல சதுப்பேதிமார்கள் - நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே! em adiyaargal aagil,எம் அடியார்கள் ஆகில் - “நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்) izhi kulathavargalenum,இழி குலத்தவர்களேனும் - தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும் neer,நீர் - நீங்கள் thozhumin,தொழுமின் - (அவர்களைத்) தொழுங்கள்; kodumin,கொடுமின் - (உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்; kolmin,கொள்மின் - (அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள் endru,என்று - என்று உபதேசித்தருளி ninnoadum okka,நின்னோடும் ஒக்க - உனக்கு ஸமமாக vazhipada,வழிபட - அவர்களை ஆராதிக்கும்படி arulinay,அருளினாய் - உரைத்தருளினாய் pola,போல - (போல்-அசை). |
| 914 | திருமாலை || (பிறப்பையும் நடத்தையும் கொண்டு அவர்களை இழிவாக நினைப்பவர்கள் சண்டாளர் என்கிறார்) 43 | அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித் தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே | arangamaa nakarulaane!-;,அரங்கமா நகருளானே!-; - அரங்கமா நகருளானே!- oor angam aarum,ஓர் அங்கம் ஆறும் - (வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும் oor vaetham naangu,ஓர் வேதம் நான்கும் - நான்கு வேதங்களையும் amara oadhi,அமர ஓதி - நெஞ்சில் பதியும்படி அதிகரித்து thamargalil thalaivar aaya,தமர்களில் தலைவர் ஆய - பாகவதர்களுக்குள்ளே முதன்மையான saadhi andhanargalenum,சாதி அந்தணர்களேனும் - ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள் numargalai,நுமர்களை - தேவரீருடைய ஜந்மத்தைப் pazhippar aagil,பழிப்பர் ஆகில் - (அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில் nodippadhu or alavil,நொடிப்பது ஓர் அளவில் - ஒரு நிமிஷ காலத்துக்குள்ளே avargal thaam,அவர்கள் தாம் - அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம் aangae,ஆங்கே - அப்போதே pulaiyar,புலையர் - சண்டாளராவர்கள் Polum,போலும் - (போலும்-வாக்யாலங்காரம்.) |
| 915 | திருமாலை || (பிரமன் முதலியோருக்கும் அரிதான பேற்றை ஒரு திர்யக் ஜந்துவுக்கு அருள் செய்தமையைக் கூறுகிறார்) 44 | பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே | pen ulam chatiyinanum,பெண் உலாம் சடையினானும் - கங்கா நதி உலாவுகின்ற சடையை யுடையனான சிவனும் piramanum,பிரமனும் - நான் முகக் கடவுளும் unnai kanban,உன்னைக் காண்பான் - உன்னைக் காண்பதற்காக en ila uli uli,எண் இலா ஊழி ஊழி - எண்ண முடியாத நெடுங்காலமாக thavam seithar,தவம் செய்தார் - தவம் புரிந்தவர்களாய் (அவ் வளவிலும் காணப் பெறாமையாலே) velki nirpa,வெள்கி நிற்ப - வெட்கமடைந்து கவிழ்தலை யிட்டிருக்க anru,அன்று - அக் காலத்திலே aanai kuu,ஆனைக்கு - (முதலை வாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக vantu,வந்து - (மடுவின் கரையில்) எழுந்தருளி vin ulaar viyappa arulai eentha,விண் உளார் வியப்ப அருளை ஈந்த - நித்ய ஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய kannarai,கண்ணறாய் - (என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே! unnai,உன்னை - உன்னை kalai kana,களை கணா - தஞ்சமாக karutum aaru enno,கருதும் ஆறு என்னோ - நினைக்கலாகுமோ? |
| 916 | திருமாலை || (இப் பிரபந்தத்தில் எம்பெருமானுக்கு உள்ள போக்யதையை வெளி இட்டார்) 45 | வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத் துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல் இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே | valam elum thavalam maadam,வளம் எழும் தவளம் மாடம் - அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களை யுடைய ma madhurai nagaram thannul,மா மதுரை நகரம் தன்னுள் - பெருமை தங்கிய வட மதுரையில் kavalam maal yaanai kontra,கவளம் மால் யானை கொன்ற - கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலை செய்தருளின kannanai,கண்ணனை - ஸ்ரீ க்ருஷ்ணனாகிய arangam maalai,அரங்கம் மாலை - கோயிலிலே (கண் வளரும்) எம்பெருமானைக் குறித்து thulapam thondu aay,துளபம் தொண்டு ஆய - திருத் துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும் thol seer,தொல் சீர் - இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான thondaradi podi,தொண்டரடிப் பொடி - தொண்டரடிப் பொடி யாழ்வார் (அருளிச் செய்த) sol,சொல் - திருமாலை யாகிய இத்திருமொழி ilaiya pun kavithai elum,இளைய புன் கவிதை ஏலும் - மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும் empiraagu,எம்பிராற்கு - பெரிய பெருமாளுக்கு inidhe aarey,இனிதே ஆறே - பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.) |
| 2065 | திரு நெடும் தாண்டகம் || சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில். ‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்; நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே!‘ என்று கவலை கொண்ட கிளியானது, முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம் என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி “வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது. முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும், மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும் அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும் திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும் இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி– 14 | முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற, அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை, விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. - 14 | முளை கதிரை,Mulai Kathirai - இளங்கதிரவனைப் போன்றவனும் குறுங்குடியுள்முகிலை,Kurungkutiyul Mukilai - திருக்குறுங்குடியில்காளமேகம் போல் விளங்குபவனும் மூவா மூ உலகும் கடந்து,Muvaa Moo Ulagum Kadandhu - நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அவ்வருகாய் அப்பால்,Appaal - பரமபத்திலே முதல் ஆய் நின்ற,Mudhal Aay Nindra - (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் அளப்பு அரிய,Alappu Ariya - (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடக்கூடாதவனும் ஆர் அமுதை,Aar Amuthai - அருமையான அம்ருதம் போன்றவனும் அரங்கம் மேய அந்தணனை,Arangam Maeya Anthananai - திருவரங்கமாநகரில் பொருந்திய பரமபரிசுத்தனும் அந்தணர்தம் சிந்தையானை,Anthanar Tham Sindhaianai - வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாகவுடையவனும் திருத்தண காவில் விளக்கு ஒளியை,Thiruththana Kaavil Vilakku Oliyai - திருத்தண்காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும் மரகத்தை,Maragaththai - மரகதப்பச்சைப்போல் விரும்பத்தக்க வடிவுபடைத்தவனும் வெஃகாவில் திருமாலை,Vekkaavil Thirumaalai - திருவெஃகாவில் கண்வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான பாட கேட்டு,Paada Kaettu - ஸர்வச்வனை (கிளி) பாட (அப்பாசுரங்களை)க் கேட்டு மட கிளியை,Mada Kiliyai - அழகிய அக்கிளியைநோக்கி வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று,Valarththathanaal Payanpetren Varuga Endru - உன்னைவளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கேவா‘ என்றழைத்து கை கூப்பி வணங்கினாள்,Kai Koopi Vanangginaal - அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள். |
| 2725 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் ‘நைவன்’ என்ற ஆழ்வாரை நோக்கின எம்பெருமான் ‘ இனி நாம் இவர்க்கு முகங்காட்டாதிருந்தால் இவர் முடிந்துவிடக்கூடும்’ என்றெண்ணி இவர்க்கு முகங் காட்டுவதாகத் திருவுள்ளம்பற்ற, அஃதறிந்த ஆழ்வார் பின்னையும் அவனது பெருமையையும் தமது சிறுமையையும் சிந்தித்துப் பின்வாங்குதலைத் தெரிவிக்கும் இந்தப் பாசுரம்.) 7 | அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7 | சிறிய ஞானத்தன்,Siriya gnanathan - அற்ப ஞானத்தை யுடையவனாகிய அடியேன்,Adiyen - நான் காண்பான்,Kaanbaan - காணும் பொருட்டு அலற்றுவன்,Alaattruvan - கூவுகின்றேனே! இதனில் மிக்கு,Idhanil mikku - இதனிலும் மேற்பட்டு ஓர் அயர்வு உண்டே,Or aiarvu undae - ஒரு அவிவேகமுண்டோ? |
| 2942 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸகல ஜகத்தினுடையவும் துன்பங்களைப்போக்கிக் காத்தருளுமியல்வினனான திருமாலினது இந்நீர்மையில் ஈடுபடமாட்டாதவர்கள் ஸம்ஸார நிலத்தில் மேன்மேலும் பிறந்து படுவர்களென்கிறாரிப்பாட்டில்.) 2 | தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும் திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப் பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார் மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2 | தண் கடல் வட்டத்து உள்ளாரை,Tan kadal vattathu ullaarai - குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமண்டலத்திலுள்ள ஜனங்களை தடிந்து உண்ணும்,Thadinthu unnum - கொன்று தின்கிறவர்களும் திண் கழல் கடால்,Thin kazhal kadal - திண்ணிய வீரக்கழல்களையணிந்த காலையுடையவருமான அசுரர்க்கு,Asurarkku - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு தீங்கு இழைக்கும் திருமாலை,Theengu izhaikkum thirumaalai - அநர்த்தங்களை விளைவிக்கின்ற திருமாலை பண்கள் தலைக்கொள்ள பாடி,Pangal thalaikkolla paadi - இசை மிகும்படி பாடி பறந்தும்,Paranthum - உயரக்கிளம்பியும் குனித்து,Kuniththu - ஆடியும் உழலாதார்,Uzhalaadhaar - எங்கம் திரியாதவர்கள் மண்கொள் உலகில்,Mankol ulagil - மண்ணுலகத்தில் வல் வினைமலைந்து மோத,Val vinaimalaindhu moda - கொடிய பாவங்கள் மேலிட்டு நலியும்படியாக பிறப்பார்,Pirappaar - பிறப்பர்கள் (நித்திய ஸம்ஸாரிகளாய்க் கிடப்பர்களென்றபடி). |
| 3047 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (செல்வம் மிக்க அரசர்களைக் கண்டால் திருமாலைக்கண்டதாகவே சொல்லுவளாம்.) 8 | திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்; உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்; ‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்; வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8 | திரு உடை,Thiru udai - பூர்ணமான செல்வத்தையுடைய மன்னரை காணில்,Mannarai kaanil - அரசர்களைக் கண்டால் திருமாலை,Thirumaalai - திருமகள் கொழுநனான எம்பெருமானை கண்டேனே என்னும்,Kandeney enum - கண்டேனே! என்று கூறுவாள்; உரு உடை,Uru udai - விலக்ஷண வடிவங்களையுடைய வண்ணங்கள் காணில்,Vannangal kaanil - (காயாம்பூ முதலிய) பதார்த்தங்களைக் கண்டால் உலகளந்தான் என்று துள்ளும்,Ulaga landhaan endru thullum - (இச்செவியுள்ளது) திருவுலகளந்தருளின எம்பெருமானுக்கு’ என அத்யவஸித்து ப்ரீதியோடே ஆடுவாள்? கரு உடை,Karu udai - விக்ரஹயுக்தமான தேவு இல்கள் எல்லாம்,Thevu ilgal ellaam - தேவாலயங்கள் யாவும் கடல்வண்ணன் கோயிலே என்னும்,Kadalvannan koyiley enum - எம்பெருமான் (எழுந்தருளியுள்ள) கோவில்களே என்று கூறுவாள் வெருவிலும் வீழ்விலும்,Veruvilum veezhvilum - அஞ்சினபோதும் (ஆர்த்தியாலே) மோஹித்தபோதும் ஓவா,Ovaa - ஒழியாதவளாகி கண்ணன் கழல்கள் விரும்பும்,Kannan kazhalgal virumbum - க்ருஷ்ணன் திருவடிகளையே பேணா நின்றாள். |
| 3512 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார்.) 11 | சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல் பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11 | சோலை திருக்கடித் தானத்து உறை திருமாலை,Solai thirukkadiththaanaththul urai thirumaalai - சோலைமிக்க திருக்கடித்தானப்பதியில் வாழும் திருமாலைக்குறித்து |
| 3523 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.) 11 | சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம் விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11 | சுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை,Sudar paambu anai nam paranai thirumaalai - தேசுமிக்கசேஷயனனாய் அஸ்மத் ஸ்வாமியான திருமாலை அடி சேர் வகைவண் குருகூர் சடகோபன்,Adi ser vagaivan kurukoor sadagopan - திருவடி பணிகையையே இயல்வாகவுடையரான ஆழ்வார் முடிப்பான் சொன்ன,Mudippaan sonna - ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தினுள் இ பத்தும்,I paththum - இப்பதிகம் சன்மம் அற தேய்ந்து விட,Sanmam ara theyndhu vida - பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி தன் கண்கள் சிவந்து நோக்கும்,Than kankal sivandhu nokkum - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும் |