Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 874 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
874திருமாலை || (அத்தோடு விரோதிக்கும் சம்சாரமும் வேண்டாம் என்கிறார்) 3
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே -3-
manisar thaam,மனிசர் தாம் - மநுஷ்யர்கள்
vedham nool,வேதம் நூல் - வேத சாஸ்திரத்திற்படியே
nooru pirayam puguvarellum,நூறு பிராயம் புகுவரேலும் - நூறு பிராயம் வாழ்ந்திருப்பர்களே யானாலும்
paathiyum,பாதியும் - அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
urangi pogum,உறங்கி போகும் - உறக்கத்தாலே கழியும்;
nindra ippadinaiyaandu,நின்ற இப்பதினையாண்டு - மிகுந்த ஐம்பது வருஷம்
paedhai,பேதை - சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
balagan,பாலகன் - ‘சிறு பயல்’ என்னும்படியான அவஸ்தையாயும்
adhu aagum,அது ஆகும் - நெஞ்சால் நினைக்கவும் தகாத யௌவநாவஸ்தையாயும்
pini,பிணி - வியாதி மயமாயும்
pashi,பசி - ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
mooppu,மூப்பு - கிழத் தனமாயும்
thunbam,துன்பம் - மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
aadhaal,ஆதலால் - இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
piravi,பிறவி - ஜந்மத்தை
venden,வேண்டேன் - விரும்புகிறேனில்லை.