Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 876 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
876திருமாலை || (அல்ப்பமாயும் அநித்யமுமாய் உள்ள ப்ராக்ருத விஷயங்களைப் பற்றுவார் சீலமில்லா சிறியார் என்கிறார்) 5
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே
pendiraal,பெண்டிரால் - மனைவியரால்
sugangal,சுகங்கள் - ஸகல ஸூகங்களையும்
uyppaan,உய்ப்பான் - அநுபவிப்பதாகக் கருதி
periyadhu or idumbai,பெரியது ஓர் இடும்பை - மிகப் பெரிதான துயரங்களை
poondu,பூண்டு - மேற் கொண்டு
iraa,இரா - இராப் பொழுதிலே
undu,உண்டு - புஜித்து
kidakkum podhum,கிடக்கும் போதும் - படுக்கையிலே சாயும் போதும்
udalukke karaittu,உடலுக்கே கரைத்து - சரீரத்திற்காகவே கவலைப் பட்டு
nainthu,நைந்து - நெஞ்சு உளையப் பெற்று,
than thuzhaam maalai maarban thamargal aay,தண் துழாம் மாலை மார்பன் தமர்கள் ஆய் - குளிர்ந்த திருத் துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமனது அடியாராய்
paadi,பாடி - (அவன் குணங்களை வாயாரப்) பாடி
aadi,ஆடி - (பரவசமாய்க்)கூத்தாடி
thontu poontu,தொண்டு பூண்டு - (இவ்வகைகளாலே)சேஷ வ்ருத்தியை மேற் கொண்டு
amutham unnaa thozhumbar,அமுதம் உண்ணா தொழும்பர் - (பகவத் குணானுபவமாகிற) அமுதத்தை புஜிக்கப் பெற்றாத நீர்
soru ukkum aare,சோறு உகக்கும் ஆறே - சோற்றை விரும்பும் வகை என்னோ!