Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 877 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
877திருமாலை || (போக்தாவின் நிலை இல்லாமையை சொல்கிறார்) 6
மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே
maram suvar,மறம் சுவர் - கொடுமையாகிற சுவரை
madhil eduthu,மதிள் எடுத்து - மதிளாக எழுப்பியும்
marumaikku,மறுமைக்கு - ஆமுஷ்மிக பலத்திற்கு
verumai poondu,வெறுமை பூண்டு - ஏழ்மையை மேற் கொண்டும் இருக்கிற நீங்கள்
puram suvar,புறம் சுவர் - வெளிச் சுவராய்
oattai,ஓட்டை - அநித்யமான
maadam,மாடம் - சரீரமானது
puralum podhu,புரளும் போது - தரையில் விழும் காலத்தை
ariya maatteer,அறிய மாட்டீர் - அறிய மாட்டீர்
aram suvar aagi nindra,அறம் சுவர் ஆகி நின்ற - தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற
aranganarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளனுக்கு
aal seyaadhe,ஆள் செய்யாதே - அடிமை செய்யாமல்
puram suvar,புறம் சுவர் - வெளிச் சுவரான உடம்பை
kolam seydhu,கோலம் செய்து - அலங்கரித்து
pul kavva,புள் கவ்வ - பறவைகள் கவ்விக் கொள்ளும் படி
kidakkindreere,கிடக்கின்றீரே - கிடக்கின்றீர்களே.