Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 879 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
879திருமாலை || (எம்பெருமானுடைய வைபவத்தை பொறாதவர்கள் கொல்லத் தக்கவர் என்கிறார்) 8
வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே
arangamaanakarulaane!;,அரங்கமாநகருளானே!-; - கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது அவதாரத்தில்
பிற்பாடர் ஆனவருடைய விரோதிகளை போக்குகைக்காக அன்றோ என்கிறார்

verupodu,வெறுப்பொடு - (பகவத் விஷயத்தைகு கேட்கவும் பொறாத) வெறுப்போடு கூடிய
samanar,சமணர் - க்ஷபணர்களும்
mundar,முண்டர் - சைவர்களும்
vidhiil,விதிஇல் - பாக்கிய ஹீனரான
saakiyar kal,சாக்கியர்கள் - பௌத்தர்களும்
nin pal,நின் பால் - உன் விஷயத்திலே
poruppu ariyanakal,பொறுப்பு அரியனகள் - பொறுக்க முடியாத சில வார்த்தைகளை
pesil,பேசில் - சொல்லுவார்களாகில்
adhuve noy aagi,அதுவே நோய் ஆகி - அந்த நிந்தைகளைக் கேட்டதே வியாதியாய்
poovathu,போவது - முடிந்து போவது (உத்தமம் அங்ஙனன்றியே)
enakku,எனக்கு - (பகவத் விரோதிகளின் ஸத்தையையும் பொறாத) எனக்கு
kuruippu adaiyum aagil,குறிப்பு அடையும் ஆகில் - இலக்கு வாய்க்குமாகில்
koodumael,கூடுமேல் - (அதற்கு மேல்) (எனக்கு சக்தியும்) கூடுமாகில்
aangae,ஆங்கே - உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே
thalaiyai aruppadhae,தலையை அறுப்பதே - அவன் தலையை அறுத்துத் தள்ளுகையே
karumam kandaiya,கருமம் கண்டாய் - செய்யத் தக்கது காண்