திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 89 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
89பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 4
கன்னற் குடம் திறந் தாலொத் தூறிக் கண கண சிரித்து வந்து முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன் தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர் நடை நடவானோ–1-7-4
பதவுரை Show / Hide
கன்னல் குடம்,Kannal kudam - கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்,Thirandhal - பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து,Othu - போன்று
ஊறி,Oori - (வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண,Kana kana - கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து,Uvandhu - ஸந்தோஷித்து
முன் வந்து நின்று,Mun vandhu nindru - என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்,Mutham tharum - (எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்,En mugil vannan - எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு,Thiru - பெரியபிராட்டியார்
மார்வன்,Maarvan - மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு,Thannai petraerku - தன்னைப் பெற்ற எனக்கு
தன்,Than - தன்னுடைய
வாய் அமுதம்,Vaai amudham - அதராம்ருதத்தை
தந்து,Thandhu - கொடுத்து
என்னை,Ennai - (தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்,Thalirppikkinraan - தழைக்கச் செய்கிறான்,
தன் ஏற்றும்,Than etrum - (இவன்) தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்,Maatralar - சத்ருக்களுடைய
தலைகள் மீதே,Thalaigal meedhe - தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)