| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 891 | திருமாலை || (எம்பெருமான் உடன் உறவு அறிந்தவருக்கு அகல ஒண்ணாது -என்கிறார்) 20 | பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும் ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே | paayum neer,பாயும் நீர் - பாயா நின்றுள்ள காவிரி சூழ்ந்த arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே paampu anai,பாம்பு அணை - சேஷ சயநத்திலே palli kond,பள்ளி கொண்ட - கண் வளர்ந்தருளா நின்ற maragatham uruvum,மரகதம் உருவும் - மரகத மணி போன்ற திருமேனி நிறமும் thoalum,தோளும் - திருத் தோள்களும் thooiya thaamarai kangalum,தூய தாமரை கண்களும் - பரிசுத்தமான தாமரை மலர் போன்ற திருக் கண்களும் thuvar ithazh,துவர் இதழ் - சிவந்த அதரமும் pavalam vaayum,பவளம் வாயும் - பவளம் போன்ற வாயும் maayanaar,மாயனார் - ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது thiru nal maarvum,திரு நல் மார்வும் - பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும். aaya seer mudiyum,ஆய சீர் முடியும் - வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும் thaesum,தேசும் - (இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும். adiyaroarkku,அடியரோர்க்கு - ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு akalalaamo,அகலலாமோ - இழக்கத் தகுமோ? |