Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 896 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
896திருமாலை || (சாஸ்த்ரீயமான பக்தி முதலியவை ஒன்றும் இல்லை என்கிறார்) 25
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே
arangamaanakarulaane,அரங்கமாநகருளானே - தம்தாமுக்கு என்ன ஒரு முதல் இல்லாதவரை
ரஷிக்கைக்காக வன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று

kulithu,குளித்து - ஸ்நாநம் பண்ணி
moondru analai,மூன்று அனலை - மூன்று அக்நிகளை
ombum,ஓம்பும் - வளர்ப்பதற்குரிய யோக்யதையைத் தருவதும்
kuri kol,குறி கொள் - கஷ்டப்பட்டுக் காப்பாற்றத் தக்கதுமான
andhanamai thannai,அந்தணமை தன்னை - ப்ராஹ்மண்யத்தை
olitthiten,ஒளித்திட்டேன் - பாழாக்கி விட்டேன்;
en kan illai,என் கண் இல்லை - (ஆத்ம விஷய ஜ்ஞானம்) என் பக்கல் இல்லை;
en kan pattanum allen,என் கண் பத்தனும் அல்லேன் - உன் விஷயமான பக்தியும் உடையவனல்லேன் நான்; (இப்படியிருக்க)
kadal vanna nambee,கடல் வண்ணா நம்பீ - ஒரு கடலோடு ஸ்ப்ர்தை பண்ணி ஒரு கடல் சாய்ந்தால் போலே இறே
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறது

en konduppadhu,என் கொண்டு களிப்பது - (நான்) எத்தைக் கொண்டு ஆநந்த்தமடைவேன்
katharukindraene,கதறுகின்றேன் - (துக்கத்துக்குப் போக்கு வீடாக) வாய் விட்டுக் கூப்பிடா நின்றேன் (ஆதலால்)
enakku,எனக்கு - என் விஷயத்தில்
alithu arulsei,அளித்து அருள்செய் - மிகவும் கிருபை செய்தருள வேணும்