| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 901 | திருமாலை || (இவை இல்லாமை மாத்ரமே அன்றியே பிறர்க்கு அநர்த்தத்தை விளைவிப்பவனாய் இரா நின்றேன் என்கிறார்) 30 | மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே | punam thulaai maalaiyaane,புனம் துழாய் மாலையானே - தந் நிலத்திலே வளர்ந்து செவ்விதான திருத் துழாயை மாலையாக அணிந்துள்ளவனே! ponnii soozh thiru arangaa,பொன்னி சூழ் திரு அரங்கா - காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள்பவனே! ennai aal udaiya kovae,என்னை ஆள் உடைய கோவே - அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே! manathil,மனத்தில் - (என்) மநஸ்ஸிலே oor thooymai illai,ஓர் தூய்மை இல்லை - தெளிவு கொஞ்சமும் இல்லை; vaayil oor in sol illai,வாயில் ஓர் இன் சொல் இல்லை - வாயிலே ஒரு நற் சொல்லும் கிடையாது; vaalaa,வாளா - நிஷ் காரணமாக sinathinaal,சினத்தினால் - கோபத்தாலே setram nookki,செற்றம் நோக்கி - பகைமை தோற்றப் பார்த்து thee vili vilivan,தீ விளி விளிவன் - மிகக் கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்; enakku,எனக்கு - இப்படிப்பட்ட துர்க் குணங்கள் நிறைந்த எனக்கு ini kadhi en sollai,இனி கதி என் சொல்லாய் - இனி மேல் என்ன கதி? அருளிச் செய்ய வேணும். |