திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 91 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
91பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 6
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினாற் போல் இலச்சினை பட நடந்து பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ–1-7-6
பதவுரை Show / Hide
கரு கார் கடல் வண்ணன்,Karu kar kadal vannan - மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை,Kamar thadhai - காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில்,Oru kaalil - ஒரு பாதத்திலே
சங்கு,Sangu - சங்கமும்
ஒரு காலில்,Oru kaalil - மற்றொரு பாதத்தில்
சக்கரம்,Chakkaram - சக்கரமும்
உள் அடி,Ul adi - பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து,Porithu - ரேகையின் வடிவத்தோடு கூடிரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த,Amaindha - பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு,Iru kaalum kondu - இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு,Angu angu - அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்,Ezhuthinaal pol - சித்திரித்ததுபோல
இலச்சினை பட,Ilachinai pada - அடையாளமுண்டாம்படி
நடந்து,Nadandhu - அடி வைத்து
பெருகா நின்ற,Perugaa nindra - (தனது வடிவழகைக் கண்டு) பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்,Inbam vellathin mel - ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்,Pinnaiyum - பின்னும்
பெய்து பெய்து,Peythu peythu - (ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)