| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 917 | திருப்பள்ளியெழுச்சி || 1 | கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய் மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | அரங்கத்து அம்மா, arangathu amma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! கதிரவன், Kathiravan - ஸூர்யனானவன் குண திசை, Guna Thisai - கிழக்குத் திக்கிலே சிகரம், Sikaram - (உதய கிரியின்) கொடு முடியிலே வந்து அணைந்தான், Vandhu Andhaan - வந்து கூடினான் கன இருள், Kana Irul - (இரவில்) அடர்ந்திருந்த இருளானது அகன்றது, Agandrathu - நீங்கி யொழிந்தது அம், Am - அழகிய காலைப் பொழுது ஆய், Kaalaip Pozhudhu Aay - காலைப் பொழுது வர மா மலர் எல்லாம், Maa Malar Ellaam - சிறந்து புஷ்பங்களெல்லாம் விரிந்து, Virindhu - விகாஸமடைய மது ஒழுகின, Madhu Ozhugina - தேன் வெள்ளமிடா நின்றன வானவர், Vaanavar - தேவர்களும் அரசர்கள், Arasarkal - ராஜாக்களும் வந்து வந்து, Vandhu Vandhu - ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து ஈண்டி, Eenti - திரண்டு எதிர் திசை, Edhir Thisai - திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே நிறைந்தனர், Niraindhanar - நிறைந்து நின்றார்கள் இவரொடும் புகுந்த, Ivarodum Pugundhu - இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய) இரு களிறு ஈட்டமும், Iru Kaliru Ettamum - பெரிய ஆண் யானைத் திரள்களும் பிடியொடு, Pidiyodu - பெண் யானைத் திரள்களும் முரசும், Murasum - பேரி வாத்யங்களும் அதிர்தலில், Adirthalil - சப்திக்கும் போது எங்கும், Engum - எத் திசையும் அலை, Alai - அலை யெறியா நின்ற கடல் போன்று உளது, Kadal Pondru Ulathu - ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது பள்ளி எழுந்தருளாய், Palli Elundharulaaye - (ஆதலால்) திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |