| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (தமேவ மத்வா) 19 | तमेव मत्वा परवासुदेव रङ्गेशयं राजत्रदर्हणीयम् । प्रावोधिक योऽकृत सूक्तिमालां भक्ताङ्किरेणुं भगवन्तमीडे ॥ தமேவ மத்வா பராஸுதேவம் ரங்கேயம் ராஜவதர்ஹணீயம் | ப்ராபோதிகீம் யோ≤க்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே || | Ya, ய: - யாவரொரு ஆழ்வார் Rajavath, ராஜவத் - அரசனைப் போல் Arhaniyam, அர்ஹணீயம் - பூஜிக்கத்தக்கவராய் Rangesayam, ரங்கேஸயம் - திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை Thamparavasudevam eva, தம்பரவாஸுதேவம் ஏவ - அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸுதேவனாகவே Madhva, மத்வா - ப்ரதிபத்திபண்ணி Prabodhikeem, ப்ராபோதிகீம் - திருப்பள்ளியுணர்த்துமதான Sookthimalam, ஸூக்திமாலாம் - பாமாலையை Akrutha, அக்ருத - அருளிச்செய்தாரோ Tham, தம் - அப்படிப்பட்ட Bhagavantham, பகவந்தம் - ஞானம் முதலிய குணங்கள் Bhakthangrirenum, பக்தாங்க்ரிரேணும் - அமைந்த தொண்டரடிப்பொடியாழ் வாரை Eede, ஈடே - துதிக்கின்றேன் |
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (மண்டங் குடியென்பர்) 20 | மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்-வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரானுதித்த வூர் | Vandu, வண்டு - வண்டுகளானவை Thinartha, திணர்த்த - நெருங்கிப் படிந்திருக்கப் பெற்ற Vayal, வயல் - கழனிகள் சூழ்ந்த Then, தென் - அழகிய Arangathu, அரங்கத்து - திருவரங்கத்தில் (கண்வளர்ந்தருள்கிற) Ammanai, அம்மானை - பெரிய பெருமாளை Palli unarthum, பள்ளி உணர்த்தும் - திருப்பள்ளியுணர்த்துமவராய் Piran, பிரான் - பரமோபகாரகராய் Thondaradipodi, தொண்டரடிப்பொடி - தொண்டரடிப் பொடி என்னுந் திருநாமமுடையரான ஆழ்வார் Udhitha oor, உதித்த ஊர் - திருவவதரித்த திவ்ய தேசமானது Maa maraiyor, மா மறையோர் - சிறந்த வைதிகர் கள் Manniya, மன்னிய - பொருந்தி வாழத்தகுந்த Seer, சீர் - சீர்மையையுடைய Mandangkudi, மண்டங்குடி - திருமண்டங்குடி என்கிற Thol nagaram, தொல் நகரம் - அநாதியான நகரமாகும் Enbar, என்பர் - என்று பெரியோர் கூறுவர் |
| 917 | திருப்பள்ளியெழுச்சி || 1 | கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய் மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | அரங்கத்து அம்மா, arangathu amma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! கதிரவன், Kathiravan - ஸூர்யனானவன் குண திசை, Guna Thisai - கிழக்குத் திக்கிலே சிகரம், Sikaram - (உதய கிரியின்) கொடு முடியிலே வந்து அணைந்தான், Vandhu Andhaan - வந்து கூடினான் கன இருள், Kana Irul - (இரவில்) அடர்ந்திருந்த இருளானது அகன்றது, Agandrathu - நீங்கி யொழிந்தது அம், Am - அழகிய காலைப் பொழுது ஆய், Kaalaip Pozhudhu Aay - காலைப் பொழுது வர மா மலர் எல்லாம், Maa Malar Ellaam - சிறந்து புஷ்பங்களெல்லாம் விரிந்து, Virindhu - விகாஸமடைய மது ஒழுகின, Madhu Ozhugina - தேன் வெள்ளமிடா நின்றன வானவர், Vaanavar - தேவர்களும் அரசர்கள், Arasarkal - ராஜாக்களும் வந்து வந்து, Vandhu Vandhu - ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து ஈண்டி, Eenti - திரண்டு எதிர் திசை, Edhir Thisai - திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே நிறைந்தனர், Niraindhanar - நிறைந்து நின்றார்கள் இவரொடும் புகுந்த, Ivarodum Pugundhu - இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய) இரு களிறு ஈட்டமும், Iru Kaliru Ettamum - பெரிய ஆண் யானைத் திரள்களும் பிடியொடு, Pidiyodu - பெண் யானைத் திரள்களும் முரசும், Murasum - பேரி வாத்யங்களும் அதிர்தலில், Adirthalil - சப்திக்கும் போது எங்கும், Engum - எத் திசையும் அலை, Alai - அலை யெறியா நின்ற கடல் போன்று உளது, Kadal Pondru Ulathu - ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது பள்ளி எழுந்தருளாய், Palli Elundharulaaye - (ஆதலால்) திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 918 | திருப்பள்ளியெழுச்சி || 2 | கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம் ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | குண திசை மாருதம், Guna Thisai Marutham - கீழ் காற்றானது கொழு கொடி, kozhu kodi - செழுமை தங்கிய கொடியை யுடைத்தான முல்லையின், mullaiyin - முல்லைச் செடியிலுண்டான கொழு மலர், Kozhu Malar - அழகிய மலர்களை அணலி, anali - அளைந்து கொண்டு இதுவோ, idhuvo - இதோ கூர்ந்தது, koorndhadhu - வீசா நின்றது; மலர் அணை, malar anai - புஷ்ப சயநத்திலே பள்ளி கொள், palli kol - உறங்குகின்ற அன்னம், annam - ஹம்ஸங்களானவை ஈன் பணி நனைந்த, een pani nanaindha - (மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த தம், tham - தங்களுடைய இரு சிறகு, iru siragu - அழகிய இறகுகளை உதறி, udhari - உதறிக் கொண்டு எழுந்தன, ezhundhana - உறக்கம் விட்டெழுந்தன; விழுங்கிய, vizhungiya - (தன் காலை) விழுங்கின முதலையின், mudhalaiyin - முதலையினுடைய பிலம்புரை, pilampurai - பாழி போன்ற பேழ் வாய், pezh vaai - பெரிய வாயிலுள்ள வெள் எயிறு உற, vel eyiru uru - வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற அதன், adhan - அம் முதலையினுடைய விடத்தினுக்கு, vidathinukku - பல விஷத்திற்கு அனுங்கி அழுங்கிய, anungi azhungiya - மிகவும் நோவுபட்ட ஆனையின், aanaiyin - கஜேந்திராழ்வரனுடைய அரு துயர், aru thuyar - பெரிய துக்கத்தை கெடுத்த, kedutha - போக்கி யருளின அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 919 | திருப்பள்ளியெழுச்சி || 3 | சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் மடல் இடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | சூழ் திசை எல்லாம், soozh thisai ellaam - கண்டவிடமெங்கும் சுடர் ஒளி, sudar oli - சூர்ய கிரணங்களானவை பரந்தன, paranthana - பரவி விட்டன; துன்னிய, thunniya - (ஆகாசத்தில்) நெருங்கிய தாரகை, thaaragai - நஷத்திரங்களினுடைய மின் ஒளி, min oli - மிக்க தேஜஸ்ஸானது சுருங்கி, surungi - குறைவுபட்டது மன்றி படர் ஒளி, padar oli - மிக்க ஒளியையுடைய பனி மதி இவன், pani madhi ivan - இக் குளிர்ந்த சந்திரனும் பசுத்தனன், pasuthanan - ஒளி மழுங்கினான்; பாய் இருள், paai irul - பரந்த இருட்டானது அகன்றது, aganradhu - நீங்கிற்று; வைகறை மாருதம் இது, vaikarai maarutham idhu - இந்த விடியற் காற்றானது பை, pai - பசுமை தங்கிய பொழில், pozhil - சோலைகளிலுள்ள கமுகின், kamugin - பாக்கு மரங்களினுடைய மடலிடை கீறி, madalidai keer'i - மடலைக் கீற வண் பாளைகள் நாற, van paalai kal naara - அழகிய பாளைகளானவை பரிமளிக்க (அப்பரிமளத்தை முகந்து கொண்டு) கூர்ந்தது, koorndhadhu - வீசுகின்றது; அடல், adal - பெருத்த மிடுக்கை யுடைத்தாய் ஒளி திகழ் தரு, oli thigazh tharu - தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள திகிரி, thigiri - திருவாழி யாழ்வானை அம் தட கை, am thada kai - அழகிய பெரிய திருக் கையிலே யுடைய அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 920 | திருப்பள்ளியெழுச்சி || 4 | மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | மேடு இன மேதிகள், medu ina medhigal - உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை தளை விடும், thalai vidum - (மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற ஆயர்கள், aayargal - இடையர் (ஊதுகிற) வேய்ங்குழல் ஒசையும், veyngkuzhal osaiyum - புல்லாங்குழலின் நாதமும் விடை, vidai - எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள) மணி, mani - மணிகளினுடைய குரலும், kuralum - ஓசையும் (ஆகிய) ஈட்டிய, eettiya - இவ் விரண்டும் கூடின த்வநியானது திசை பரந்தன, thisai paranthana - திக்குக்களெங்கும் பரவி விட்டது; வயலுள், vayalul - கழனிகளிலுள்ள சுரும்பு இனம், surumbu inam - வண்டுகளின் திரள் இரிந்தன, irindhana - ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின; இலங்கையர் குலத்தை, ilangaiyar kulathai - ராக்ஷஸ வர்க்கத்தை வாட்டிய, vaattiya - உருவழித்த வரி இலை, vari ilai - அழகிய சார்ங்கத்தை யுடைய வானவர் ஏறெ, vaanavar aere - தேவாதி தேவனே! மா முனி, maa muni - விச்வாமித்ர மஹர்ஷியினுடைய வேள்வியை, velviyai - யாகத்தை காத்து, kaathu - நிறைவேற்றுவித்து அவபிரதம் ஆட்டிய, avapradham aattiya - அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின அடு திறள், adu thirul - (விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய் அயோத்தி எம் அரசே, ayodhi em arase - அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே! அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 921 | திருப்பள்ளியெழுச்சி || 5 | புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே | பூ, poo - பூத்திரா நின்றுள்ள பொழில்களின் வாய், pozhilkalin vaai - சோலைகளிலுள்ள புட்களும், pudkalum - பறவைகளும் புலம்பின, pulambina - (உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன; போயிற்று, poiyitru - கழிந்தது; புலரி, pulari - ப்ராத: காலமானது புகுந்தது, pugundhadhu - வந்தது; குண திசை, guna thisai - கீழ்த் திசையிலே கனை, kanai - கோஷஞ்செய்கிற கடல், kadal - கடலினுடைய அரவம், aravam - ஒசையானது கலந்தது, kalanthadhu - வியாபித்தது; களி, kali - தேனைப் பருகிப் களிக்கின்ற வண்டு, vandu - வண்டுகளானவை மிழற்றிய, mizhatrrya - சப்தியா நிற்கிற கலம்பகன் புனைந்த, kalambakan punaindha - பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட அம், am - அழகிய அலங்கல் தொடையல் கொண்டு, alankal todaiyal kondu - அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு அமரர்கள், amarargal - தேவர்கள் அடி இணை பணிவான், adi inai panivaan - தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக புகுந்தனர், pugundhanar - வந்து நின்றனர்; ஆதலில், aadhalil - ஆகையாலே அம்மா, amma - ஸர்வ ஸ்வாமிந்! இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில், ilangaiyar kon vazhipadu sei koyil - லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே எம்பெருமான்!, emperumaan - அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 922 | திருப்பள்ளியெழுச்சி || 6 | இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ இறையவர் பதினொரும் விடையரும் இவரோ மருவிய மயிலினன் அறு முகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி புரவியோடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | மணி, mani - விலக்ஷணமாய் நெடு, netu - பெரிதான தேரோடும், theroadum - தேரோடுகூட இரவியர், iraviyar - பன்னிரண்டு ஆதித்யர்களும் இறையவர், iraiyavar - ஜகத்துக்கு நிர்வாஹகர்களான பதினொரு விடையரும், padhinoaru vidaiyarum - ஏகாதச ருத்ரர்களும் மருவிய, maruviya - பொருந்திய மயிலினன், mayilinan - மயில் வாகனத்தை யுடைய அறுமுகன், arumugan - ஸுப்ரஹ்மண்யனும் மருதரும், marudharum - மருத் கணங்களான ஒன்பதின்மரும் வசுக்களும், vasukkalum - அஷ்ட வஸுக்களும் வந்து வந்து, vandhu vandhu - ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து ஈண்டி, eenti - நெருங்கி நிற்க புரவியோடு தேரும், puraviyodu therum - (இவர்களுடைய வாஹநமான) குதிரைகண் பூண்ட ரதங்களும் பாடலும் ஆடலும், paadalum aadalum - பாட்டும் கூத்துமாய் குமர தண்டம் புகுந்து, kumara thandam pugundhu - தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து ஈண்டிய வெள்ளம், eendhiya vellam - நெருங்கி யிருக்கிற திரளானது அரு வரை அனைய, aru varai anaiya - பெரிய மலை போன்ற கோயில், koyil - கோயிலில் நின் முன், nin mun - தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;) அரங்கத்தமா, arangathama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி யெழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 923 | திருப்பள்ளியெழுச்சி || 7 | அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன் கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான் அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | எம்பெருமான், emperumaan - எமக்கு ஸ்வாமியான உன் கோயிலின் வாசல், un koyilin vaasal - தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே இந்திரன் தானும், indiran thaanum - தேவேந்திரனும் ஆனையும், aaniyum - (தேவேந்திரனின் வாஹனமான) ஐராவத யானையும் வந்து, vandhu - வந்திருப்பது மன்றி அந்தரத்து அமரர்கள், andarathu amargal - அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும் கூட்டங்கள், kootangal - தேவர்களுடைய பரிவாரங்களும் அரு தவம் முனிவரும், aru thavam munivarum - மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும் மருதரும், marudharum - மருத் கணங்களும் இயக்கரும், iyakkarum - யக்ஷர்களும் சுந்தரர் நெருக்க, sundharar nerukka - கந்தர்வர் நெருக்கவும் விச்சாதார் நூக்க, vichaadhaar nookka - வித்யாதரர்கள் தள்ளவும் திருவடி தொழுவான் மயங்கினர், Thiruvadi thozhuvan mayanginar - (தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர் அந்தரம், antharam - ஆகாசமும் பார், paar - பூமியும் இடம் இல்லை, idam illai - அவகாசமற்றிரா நின்றது அரங்கத்தமா, arangathama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளியெழுந்தருளாய், palli ezhuntharulay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 924 | திருப்பள்ளியெழுச்சி || 8 | வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | வழங்க, vazhang - தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக வம்பு அவிழ், vampu avizh - பரிமளம் மிகுந்த வாயுறை, vaayurai - அறுகம் புல்லும் மா, maa - சிறந்த நிதி, nithi - சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு) வானவர், vaanavar - தேவர்களும் கபிலை, kapilai - காமதேநுவும் ஓண், oan - ஓளி பொருந்திய கண்ணாடி முதலா, kannadi mudhala - கண்ணாடி முதலாக எம்பெருமான், emperumaan - ஸ்வாமியான தேவரீர் காண்டற்கு, kaandarku - கண்டருளுகைக்கு ஏற்பன ஆயின, yerpan aayina - தகுதியாயுள்ளவையான படிமைக்கலம், padimaikkalam - உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு நல் முனிவர், nal munivar - மஹர்ஷிகளும் தும்புரு நாரதர், thumpuru naarathar - தும்புரு நாதர்களும் புகுந்தனர் ,pugundhanar - வந்து நின்றார்கள் இரவியும், iraviyum - சூரியனும் துலங்கு ஒளி, thulangu oli - (சூரியனது) மிக்க தேஜஸ்ஸை பரப்பி, parappi - எங்கும் பரவச் செய்து கொண்டு தோன்றினன், thondrinan - உதயமானான்; இருள், irul - இருளானது அம்பரதலத்தில் நின்று, ambarathalathil nindru - ஆகாசத்தினின்றும் போய் அகல்கின்றது, poi agal kingradhu - நீங்கிப் போயிற்று; அரங்கத்தம்மா, arangathamama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளியெழுந்தருளாய், palliyezhundharulaay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 925 | திருப்பள்ளியெழுச்சி || 9 | ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம் மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | ஏதம் இல், yedham il - குற்றமற்ற தண்ணுமை, thannumai - சிறுபறையும் எக்கம், ekkam - ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும் மத்தளி, maththali - மத்தளமும் யாழ், yaal - வீணையும் குழல், kulal - புல்லாங்குழல்களுமாய் திசை, thisai - திக்குக்களெங்கும் முழவமோடு, muzhavamodu - இவற்றின் முழக்கத்தோடு இசை கெழுமி கீதங்கள் பாடினர், isai kelumi keethangal paadinarr - இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான கின்னரர், kinnarar - கின்னார்களும் கருடர், karudar - கருடர்களும் கெந்தருவரும், kendharuvarum - கந்தர்வர்களும் இவர், ivar - இதோ மற்றுள்ளவர்களும் மா தவர், maa thavar - மஹர்ஷிகளும் வானவர், vaanavar - தேவர்களும் சாரணர், saaranar - சாரணர்களும் இயக்கர், iyakkar - யக்ஷர்களும் சித்தரும், sidharum - ஸித்தர்களும் திருவடி தொழுவான், thiruvadi thozhuvan - (தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக கங்குலும் எல்லாம், kangulum ellaam - இரவெல்லாம் மயங்கினர், mayanginar - (நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்; ஆதலில், aadhali - ஆகையாலே அவர்க்கு, avarkku - அவர்களுக்கு நாள் ஒலக்கம் அருள, naal olakam arul - பகலோலக்க மருளுகைக்காக அரங்கத்தம்மா, arangathamama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளியெழுந்தருளாய், palliyezhundharulaay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 926 | திருப்பள்ளியெழுச்சி || 10 | கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா! தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே | புனல் சூழ், punal soozh - திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட அரங்கா, Arangaa - ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே! கடி, kadi - பரிமளமுடைய கமலம் மலர்கள், Kamalam Malar - தாமரைப் பூக்களானவை மலர்ந்தன, Malarndhana - (நன்றாக) மலர்ந்து விட்டன; கதிரவன், Kathiravan - (தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன் கனை கடல், Kanai Kadal - கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே முளைத்தனன், Mulaidhanan - உதய கிரிலே வந்து தோன்றினான்; துடி இடையார், Thudi Idaiyar - உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர் சுரி குழல், Suri Kuzhal - (தமது) சுருண்ட மயிர் முடியை பிழிந்து உதறி, Pizhindhu Udari - (நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு துகில் உடுத்து, Thugil Uduthu - (தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு ஏறினர், Aerinar - கரையேறி விட்டார்கள்; தொடை ஒத்த, Todai Ottha - ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற துளவமும், Thulavamum - திருத் துழாய் மாலையும் கூடையும், Koodaiyum - பூக் குடலையும் பொலிந்து தோன்றிய, Polindhu Thondriya - விளங்கா நிற்கப் பெற்ற தோள், Thol - தோளை யுடைய தொண்டரடிப்பொடி யென்னும், Thondaradippodi Yennum - ‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய அடியனை, Adiyanai - தாஸனை அளியன் என்று அருளி, Aliyan Endru Aruli - ‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி உன் அடியார்க்கு, Un Adiyarku - தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு ஆள் படுத்தாய், Aal Paduthaai - ஆளாக்க வேணும் பள்ளி எழுந்தருளாய், Palli ezhuntharulay - திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும் |