| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 918 | திருப்பள்ளியெழுச்சி || 2 | கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம் ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | குண திசை மாருதம், Guna Thisai Marutham - கீழ் காற்றானது கொழு கொடி, kozhu kodi - செழுமை தங்கிய கொடியை யுடைத்தான முல்லையின், mullaiyin - முல்லைச் செடியிலுண்டான கொழு மலர், Kozhu Malar - அழகிய மலர்களை அணலி, anali - அளைந்து கொண்டு இதுவோ, idhuvo - இதோ கூர்ந்தது, koorndhadhu - வீசா நின்றது; மலர் அணை, malar anai - புஷ்ப சயநத்திலே பள்ளி கொள், palli kol - உறங்குகின்ற அன்னம், annam - ஹம்ஸங்களானவை ஈன் பணி நனைந்த, een pani nanaindha - (மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த தம், tham - தங்களுடைய இரு சிறகு, iru siragu - அழகிய இறகுகளை உதறி, udhari - உதறிக் கொண்டு எழுந்தன, ezhundhana - உறக்கம் விட்டெழுந்தன; விழுங்கிய, vizhungiya - (தன் காலை) விழுங்கின முதலையின், mudhalaiyin - முதலையினுடைய பிலம்புரை, pilampurai - பாழி போன்ற பேழ் வாய், pezh vaai - பெரிய வாயிலுள்ள வெள் எயிறு உற, vel eyiru uru - வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற அதன், adhan - அம் முதலையினுடைய விடத்தினுக்கு, vidathinukku - பல விஷத்திற்கு அனுங்கி அழுங்கிய, anungi azhungiya - மிகவும் நோவுபட்ட ஆனையின், aanaiyin - கஜேந்திராழ்வரனுடைய அரு துயர், aru thuyar - பெரிய துக்கத்தை கெடுத்த, kedutha - போக்கி யருளின அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |