Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 919 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
919திருப்பள்ளியெழுச்சி || 3
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
சூழ் திசை எல்லாம், soozh thisai ellaam - கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி, sudar oli - சூர்ய கிரணங்களானவை
பரந்தன, paranthana - பரவி விட்டன;
துன்னிய, thunniya - (ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை, thaaragai - நஷத்திரங்களினுடைய
மின் ஒளி, min oli - மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி, surungi - குறைவுபட்டது மன்றி
படர் ஒளி, padar oli - மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன், pani madhi ivan - இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன், pasuthanan - ஒளி மழுங்கினான்;
பாய் இருள், paai irul - பரந்த இருட்டானது
அகன்றது, aganradhu - நீங்கிற்று;
வைகறை மாருதம் இது, vaikarai maarutham idhu - இந்த விடியற் காற்றானது
பை, pai - பசுமை தங்கிய
பொழில், pozhil - சோலைகளிலுள்ள
கமுகின், kamugin - பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி, madalidai keer'i - மடலைக் கீற
வண் பாளைகள் நாற, van paalai kal naara - அழகிய பாளைகளானவை பரிமளிக்க (அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது, koorndhadhu - வீசுகின்றது;
அடல், adal - பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு, oli thigazh tharu - தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி, thigiri - திருவாழி யாழ்வானை
அம் தட கை, am thada kai - அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்