Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 920 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
920திருப்பள்ளியெழுச்சி || 4
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
மேடு இன மேதிகள், medu ina medhigal - உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும், thalai vidum - (மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள், aayargal - இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும், veyngkuzhal osaiyum - புல்லாங்குழலின் நாதமும்
விடை, vidai - எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி, mani - மணிகளினுடைய
குரலும், kuralum - ஓசையும் (ஆகிய)
ஈட்டிய, eettiya - இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன, thisai paranthana - திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள், vayalul - கழனிகளிலுள்ள
சுரும்பு இனம், surumbu inam - வண்டுகளின் திரள்
இரிந்தன, irindhana - ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை, ilangaiyar kulathai - ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய, vaattiya - உருவழித்த
வரி இலை, vari ilai - அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ, vaanavar aere - தேவாதி தேவனே!
மா முனி, maa muni - விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை, velviyai - யாகத்தை
காத்து, kaathu - நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய, avapradham aattiya - அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள், adu thirul - (விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே, ayodhi em arase - அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்