Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 922 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
922திருப்பள்ளியெழுச்சி || 6
இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
மணி, mani - விலக்ஷணமாய்
நெடு, netu - பெரிதான
தேரோடும், theroadum - தேரோடுகூட
இரவியர், iraviyar - பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர், iraiyavar - ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும், padhinoaru vidaiyarum - ஏகாதச ருத்ரர்களும்
மருவிய, maruviya - பொருந்திய
மயிலினன், mayilinan - மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன், arumugan - ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும், marudharum - மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும், vasukkalum - அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து, vandhu vandhu - ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி, eenti - நெருங்கி நிற்க
புரவியோடு தேரும், puraviyodu therum - (இவர்களுடைய வாஹநமான) குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும், paadalum aadalum - பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து, kumara thandam pugundhu - தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம், eendhiya vellam - நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய, aru varai anaiya - பெரிய மலை போன்ற
கோயில், koyil - கோயிலில்
நின் முன், nin mun - தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா, arangathama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளி யெழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்