Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 923 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
923திருப்பள்ளியெழுச்சி || 7
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
எம்பெருமான், emperumaan - எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல், un koyilin vaasal - தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும், indiran thaanum - தேவேந்திரனும்
ஆனையும், aaniyum - (தேவேந்திரனின் வாஹனமான) ஐராவத யானையும்
வந்து, vandhu - வந்திருப்பது மன்றி
அந்தரத்து அமரர்கள், andarathu amargal - அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள், kootangal - தேவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும், aru thavam munivarum - மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும், marudharum - மருத் கணங்களும்
இயக்கரும், iyakkarum - யக்ஷர்களும்
சுந்தரர் நெருக்க, sundharar nerukka - கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க, vichaadhaar nookka - வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர், Thiruvadi thozhuvan mayanginar - (தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம், antharam - ஆகாசமும்
பார், paar - பூமியும்
இடம் இல்லை, idam illai - அவகாசமற்றிரா நின்றது
அரங்கத்தமா, arangathama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளியெழுந்தருளாய், palli ezhuntharulay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்