Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 924 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
924திருப்பள்ளியெழுச்சி || 8
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
வழங்க, vazhang - தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக
வம்பு அவிழ், vampu avizh - பரிமளம் மிகுந்த
வாயுறை, vaayurai - அறுகம் புல்லும்
மா, maa - சிறந்த
நிதி, nithi - சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர், vaanavar - தேவர்களும்
கபிலை, kapilai - காமதேநுவும்
ஓண், oan - ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா, kannadi mudhala - கண்ணாடி முதலாக
எம்பெருமான், emperumaan - ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு, kaandarku - கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின, yerpan aayina - தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம், padimaikkalam - உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர், nal munivar - மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர், thumpuru naarathar - தும்புரு நாதர்களும்
புகுந்தனர் ,pugundhanar - வந்து நின்றார்கள்
இரவியும், iraviyum - சூரியனும்
துலங்கு ஒளி, thulangu oli - (சூரியனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி, parappi - எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன், thondrinan - உதயமானான்;
இருள், irul - இருளானது
அம்பரதலத்தில் நின்று, ambarathalathil nindru - ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது, poi agal kingradhu - நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா, arangathamama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளியெழுந்தருளாய், palliyezhundharulaay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்